டி.ஜி.பி. - தலைமைச் செயலாளர் ஆளுநருடன் சந்திப்பு

தமிழகத்தில் ஆளும் அதிமுக-வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்துள்ளார். இதேபோல் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னரை நேற்று சந்தித்து பேசியுள்ளார்.

Last Updated : Feb 10, 2017, 12:33 PM IST
டி.ஜி.பி. - தலைமைச் செயலாளர் ஆளுநருடன் சந்திப்பு title=

சென்னை: தமிழகத்தில் ஆளும் அதிமுக-வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்துள்ளார். இதேபோல் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னரை நேற்று சந்தித்து பேசியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன், டி.ஜி.பி. ராஜேந்திரன் இன்று சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலை, அதிகாரிகள் மாற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து டி.ஜி.பி.யுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தினார். 

டி.ஜி.பி.யை தொடர்ந்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் ஆணையர் ஜார்ஜ், உளவுப்பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் ஆகியோரும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Trending News