தமிழகத்தில் எங்கும் மக்கள் கூட்டம்; தொற்று ஊரக பகுதிகளுக்கும் பரவும் அபாயம்

நாளை (மே 24ம் தேதி) முதல் ஒரு வார காலத்துக்கு முழுமையாக எந்தவித தளர்வுகளும் இன்றி தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 23, 2021, 11:00 AM IST
  • அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிப்பு.
  • தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,046 ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 2,84,278 ஆக உள்ளது.
தமிழகத்தில் எங்கும் மக்கள் கூட்டம்; தொற்று ஊரக பகுதிகளுக்கும் பரவும் அபாயம் title=

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், நாளை (மே 24ம் தேதி) முதல் ஒரு வார காலத்துக்கு முழுமையாக எந்தவித தளர்வுகளும் இன்றி தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதற்காக மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள ஏதுவாக, நேற்று மற்றும் இன்று இரண்டு நாட்கள் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிப்பு வெளியாகியது. 

அதை அடுத்து, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. காய்கறிகளின் விலையும் விண்ணை தொட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் காற்றில் பறக்க விட்டு, மும்முரமாக பொருட்கள் வாங்கும் வேலையில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால், ஏற்கனவே தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தொற்று ஏற்படும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் வெளியூருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இரண்டு நாட்கள் பேருந்து சேவை இருக்கும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து இன்று முக்கிய நகரங்களுக்கான பேருந்துகள் இயக்கப்பட்டன. அங்கேயும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. 

மேலும், தற்போது, நகர பகுதிகளில் தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ள நிலையில், நகர் பகுதியிலிருந்து செல்லும் மக்கள், இங்கிருந்து தொற்றை ஊரக பகுதிகளுக்கும் பரப்பும் அபாயம் உள்ளது. 

ALSO READ: தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு: கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்

நேற்று கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 448 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,046 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 2,84,278 ஆக உள்ளது.

சென்னையில் (Chennai) மட்டும் நேற்று ஒரே நாளில் 5,559 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்று சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 86 பேர் உயிர் இழந்தனர். 

ALSO READ: கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News