தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறை இணைந்து மீட்க முயற்சித்தபோது உயிருடன் எழுந்து வந்த அதிசயம் திண்டுக்கல்லில் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம் ஆலகுவார் பட்டியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் தனியார் மில்லில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்த முருகவேல் சீலப்பாடி பகுதியில் உள்ள கள்ளச்சந்தையில் மது வாங்கி அருந்திவிட்டு அருகே இருந்த ஓடை பாலத்தில் அமர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. போதை தலைக்கேறியதால் தடுமாறிப்போய் கீழே விழுந்த முருகவேல். பாதை முழுவதும் தண்ணீர் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஓடை பாலத்தில் நிரம்பி இருந்த தண்ணீரில் நீந்திக் கொண்டே உள்ளே சென்றுள்ளார்.
ALSO READ | 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை !
மூன்று மணி நேரமாக மிதந்த முருகவேலை கள்ளச்சந்தையில் மது வாங்க வந்திருந்த மற்றொரு நபர் ஓடை பாலத்தின் அடியில் ஒரு உடல் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து. தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்பதற்காக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடலை மீட்க முயற்சித்த போது பெரும் சத்தத்துடன் தண்ணீரில் நீந்திக் கொண்டே ஓடை பாலத்தின் அடியில் இருந்து இறந்ததாக கருதப்பட்ட அந்த உடல் வெளியே எட்டிப்பார்த்தது. இதனை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை மீட்டு அவர் சட்டைப்பையில் வைத்திருந்த அடையாள அட்டையை வைத்து தாடிக்கொம்பு அருகே உள்ள அலக்குவார் பட்டியைச் சேர்ந்த முருகவேல் என்பதும், இவர் தனியார் மில் ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிய வரவே முருகவேளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR