செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர்

Chess Olympiad 2022 Case Verdict Reserved: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் பெயர், புகைப்படம் சேர்க்கக் கோரிய வழக்கின் தீர்pபு ஒத்திவைப்பு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 28, 2022, 02:45 PM IST
  • செஸ் ஒலிம்பியாட் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பெயர் இடம்பெறாதது தவறு
  • வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது
செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் title=

Chess Olympiad 2022: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் பெயர், புகைப்படம் சேர்க்கக் கோரிய வழக்கின் தீர்pபு ஒத்திவைக்கப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது. நிகழ்ச்சியின் விளம்பரங்களில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் பெயர் இடம் பெறவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

மேலும், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டியின் விளம்பரத்திற்காக பெருமளவிலான பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது.

ஆனால் ஆளும் கட்சி இதனை தங்களுக்கான அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக் கொண்டது. இதற்காக இந்நிகழ்விற்கான விளம்பரங்களில், இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து முதல்வரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.

எனவே, சென்னையில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் பெயர் மற்றும் புகைப்படத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் அணில் காணொலி வழியாக ஆஜராகினார். 

வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி பல கேள்விகளை எழுப்பினார். இந்த நிகழ்வு நமது நாட்டிற்கு, சிறப்பாக தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. பிரதமர் இந்நிகழ்வை தொடங்கி வைப்பதாக நாளிதழ்களில் செய்யப்பட்ட விளம்பரங்களில், பிரதமரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க | அசத்தும் செஸ் ஒலிம்பியாட்! அதிவேக 5ஜி இன்டர்நெட் 

குடியரசுத் தலைவர் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்ததனால், குடியரசுத் தலைவரின் புகைப்படம் இடம்பெறவில்லை. மதுரையில் இருப்பதால், அந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. அதனை தவறவிடுவதாக வருந்துகிறேன் என குறிப்பிட்டார்.

மனுதாரர் தரப்பில் பேசிய வழக்கறிஞர், பிரதமரின் புகைப்படத்தை இத்தகைய நிகழ்வில் இடம்பெறச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு தமிழக அரசுத்தரப்பில் மன்னிப்பு கோர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசுத்தரப்பு, "தமிழக அரசு இந்நிகழ்வை  ஒருங்கிணைத்துள்ளது. பிரதமர் வருகை 22ஆம் தேதியே உறுதி செய்யப்பட்டு மத்திய அமைச்சகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றைய நாளிதழிளில் கூட பிரதமரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த தலைமைநீதிபதி அமர்வு, "குடியரசுத் தலைவரும், பிரதமரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே? 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான  விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, "முதலில் இது நமது தேசத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. சோவியத் யூனியன் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் நடத்த முடிவெடுத்தது  பெருமைமிக்கது. நமது தேசம் குடியரசுத்தலைவர், பிரதமரின் கீழ் நிர்வகிக்கப்படும் சூழலில், இது போன்ற சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும்" என கருத்து தெரிவித்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க: வருக வருக தமிழ்நாட்டுக்கு வருக - செஸ் ஒலிம்பியாட் பாடல் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News