தந்தை-மகன் கொலை வழக்கு: ஜூலை 28-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய CBI, CBCID-க்கு நீதிமன்றம் உத்தரவு

தந்தை-மகன் இறப்பு வழக்கு தொடர்பான அறிக்கைகளை ஜூலை 28-க்குள் தாக்கல் செய்ய நீதிமன்றம் சிபிஐ, சிபி-சிஐடிக்கு அறிவுறுத்தியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 9, 2020, 06:29 PM IST
  • சாத்தான்குளம் வழக்கு தொடர்பான அறிக்கைகளை ஜூலை 28-க்குள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
  • டெல்லியில் இருந்து 7 சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு வெள்ளிக்கிழமை மதுரைக்கு வர உள்ளது.
  • காவலில் இறந்த தந்தை-மகன் வழக்குகள் தொடர்பான விசாரணைகளை நாளை முதல் CBI தொடர உள்ளது.
தந்தை-மகன் கொலை வழக்கு: ஜூலை 28-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய CBI, CBCID-க்கு நீதிமன்றம் உத்தரவு title=

சென்னை: மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (சிபிஐ - CBI) அதிகாரிகள் நாளை (வெள்ளிக்கிழமை) மதுரை வருகை தர உள்ளனர். அவர்கள் வந்ததும் காவலில் இறந்த தந்தை-மகன் கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகளைத் தொடர உள்ளனர் என்று சிபிஐ வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை (Madurai High Court) பெஞ்ச் நீதிபதிகளிடம் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை விசாரிக்க தேவையான அனைத்து வசதிகளை செய்து தருமாறு தமிழக தலைமை செயலாளரிடம் (Tamil Nadu Chief Secretary) கோரியுள்ளதாகவும் சிபிஐ ஆலோசகர் தெரிவித்தார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாத்தான்குளத்தில் (Sathankulam Custodial Death) காவலில் இறந்ததாகக் கூறப்படும் தந்தை-மகன் இரட்டையரின் கொலை வழக்கை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை (Madras High Court Madurai Bench) தானாகவே முன்வந்து ஏற்றது. இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த செய்தியும் படிக்கவும் | சாத்தான்குளம் வழக்கு: சாட்சியாக இருக்கும் பெண் காவலருக்கு போலீஸ் பாதுகாப்பு

நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் ராஜமணிக்கம் அடங்கிய அமர்விடம் டெல்லியில் இருந்து 7 சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு வெள்ளிக்கிழமை மதுரைக்கு வரும் என்று சிபிஐ (CBI) வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதுவரை, வழக்கைக் கையாண்ட சிபி-சிஐடி (Criminal Investigation Department), நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்து 10 காவல்துறையினரை கைது செய்துள்ளது. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சிபி-சிஐடி வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையம், சிறைத்துறை மற்றும் மருத்துவமனையில் தந்தை-மகன் இருவரின் இறுதி நாட்களை குறித்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியும் படிக்கவும் | சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை CBI விசாரிக்க ஒப்புதல்: TN Govt

அவர்களின் கருத்தை கேட்ட நீதிமன்றம் சிபிஐ மற்றும் சிபி-சிஐடி முறையான நடவடிக்கைகளைத் தொடருமாறு அறிவுறுத்தியது. ஜூலை 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அடுத்த விசாரணைக்கு முன்னர், இந்த வழக்கு சம்பந்தமான அறிக்கைகளை சீல் செய்யப்பட்ட அட்டையில் தாக்கல் செய்ய நீதிமன்றம் சிபிஐ (Central Bureau of Investigation) மற்றும் சிபி-சிஐடிக்கு உத்தரவிட்டது.

இந்த செய்தியும் படிக்கவும் | சாத்தான்குளம் மரணங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ரஜினிகாந்த்

Trending News