பெட்ரோல் கேனுடன் அம்மா உணவகம் வாயிலில் அமர்ந்து பெண் பணியாளர்கள் தர்ணா

எங்களுக்கு பணி இல்லை என்றால், எங்கள் குடும்பத்தை, வாழ்வாதரத்தை எப்படி நடத்துவது என்று கேள்வி எழுப்பிய அவர்கள், திடிர் பணி நீக்கம் நடவடிக்கையால் தற்கொலை செய்யும் அளவிற்கான மனநிலையை ஏற்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 10, 2021, 08:32 AM IST
பெட்ரோல் கேனுடன் அம்மா உணவகம் வாயிலில் அமர்ந்து பெண் பணியாளர்கள் தர்ணா title=

மதுரை: மதுரை அம்மா உணவக பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக கூறி வெளியேற்றிய மாநகராட்சியை கண்டித்து பெண் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் காவல்துறையில் புகார் அளித்து கைது செய்வோம் என கூறி மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 12 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகரில் சுந்தராஜபுரம் மார்க்கெட் அருகே அமைந்துள்ள அம்மா உணவகத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்துவரக்கூடிய நிலையில் நேற்று திடிரென இந்த அம்மா உணவகத்தில் பணிபுரியக்கூடிய பெண் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களை பணிநீக்கம் செய்வதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் கையெழுத்து பெற்றுள்ளனர். 

இதனை கண்டித்தும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றியும் பழிவாங்கும் நடவடிக்கையில் மதுரை மாநகராட்சி ஈடுபடுவதாகக் கூறி பெண் பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ |  அம்மா உணவகத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் உத்தரவு

மாநகராட்சியின் திடிர் நடவடிக்கையால் தங்களது வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறும் பணியாளர்கள் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். எங்களுக்கு பணி இல்லை என்றால், எங்கள் குடும்பத்தை, வாழ்வாதரத்தை எப்படி நடத்துவது என்று கேள்வி எழுப்பிய அவர்கள், திடிர் பணி நீக்கம் நடவடிக்கையால் தற்கொலை செய்யும் அளவிற்கான மனநிலையை ஏற்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

பணியாளர்கள் போராட்டம் காரணமாக உணவகத்திற்கு உணவு அருந்த வந்தவர்கள் பசியுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. தங்களது அரசியல் பழிவாங்களுக்காக பணியாளர்களை பணி நீக்கம் செய்து ஏழை எளியோரை பசியில் ஆழ்த்தும் அரசு தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "கனமழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ALSO READ |  அம்மா உணவகங்களில் மீண்டும் சப்பாத்தி விற்பனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News