சென்னை அண்ணா பல்கலைக்கழக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ‘உலக அமைதிக்கும் மனித வாழ்விற்கும் வழி காட்டும் திருக்குறள் (Thirukkural To The Humanity For World Peace And Harmony') என்ற மாநாட்டை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “திருக்குறள் மொழிப்பெயர்ப்பட்ட போது, அதிலிருந்த ஆன்மீக கருத்துகளை ஜி.யூ. போப் மறைத்துவிட்டார். அரசியல் காரணத்திற்காக திருக்குறளில் உள்ள ஆன்மீக கருத்துக்கள் மறைக்கப்படுவது சரியானதில்லை” என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.
ஆளுநரின் இந்தக் கருத்து கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் ஆளுநர் இதுபோல் பல விஷயங்களை பேசிவருகிறார். அவரது கருத்துகள் இந்துத்துவாவை பரப்புவது போல் இருக்கிறது அவர் ஆளுநரா இல்லை ஆர்.எஸ்.எஸ் அடிவருடியா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
தற்போது அந்த வரிசையில் திருக்குறள் குறித்த கருத்தையும் தெரிவித்திருக்கிறார். இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். அந்தவகையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
தர்மார்த்த காமமோட்சம் என்பது
வடமொழி நிரல்நிரைமோட்சம்
ஆன்மிகக் கற்பனை என்றுதான்
வள்ளுவர்
அறம் பொருள் இன்பத்தோடு
நிறுத்தினார்ஆன்மிகம் அதில் ஏது?
வள்ளுவம் வாழ்வியல்நூல்அது
காற்றைப்போல் பொதுவானது
காற்றுக்கு யார் சாயம் அடிப்பது?#Thiruvalluvar #Thirukkural— வைரமுத்து (@Vairamuthu) October 9, 2022
“தர்மார்த்த காமமோட்சம் என்பது
வடமொழி நிரல்நிரை
மோட்சம்
ஆன்மிகக் கற்பனை என்றுதான்
வள்ளுவர்
அறம் பொருள் இன்பத்தோடு
நிறுத்தினார்
ஆன்மிகம் அதில் ஏது?
வள்ளுவம் வாழ்வியல்நூல்
அது
காற்றைப்போல் பொதுவானது
காற்றுக்கு யார் சாயம் அடிப்பது? என குறிப்பிட்டு ஆளுநரை சாடியிருக்கிறார். தற்போது வைரமுத்துவின் இந்த ட்வீட் பலரால் ரீட்வீட் செய்யப்பட்டுவருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ