இன்று முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு செய்யப்படுமா?

இன்று காலை 10 மணி அளவில் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி (CM Edappadi K. Palaniswami), சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 29, 2020, 08:29 AM IST
  • காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை.
  • மாநிலம் முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவு.
  • கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 82,275-ஆக உள்ளது.
இன்று முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு செய்யப்படுமா? title=

சென்னை: நாளுக்கு நாள் தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் (Coronavirus In Tamil Nadu) தொற்று அதிகரித்து வருவதால், இன்று (திங்கள்கிழமை) சென்னையில் சுகாதார நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளார். அவர்களுடன் மாநிலத்தின் கொரோனா நிலைமை குறித்து ஆலோசித்து பின்னர் மாநிலம் முழுவதும் முழுமையான ஊரடங்கு (Tamil Nadu Lockdown) அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

தற்போது தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு (Lockdown 5) அமலில் உள்ளது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இல்லை சில தளர்வுகளுடன் மீண்டும் இதேபோல ஊரடங்கு தொடருமா? என்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும். அதேநேரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் எனவும் தெரிகிறது. 

பிற செய்தி | பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியமில்லை.. இனி ஆன்லைன் வகுப்பு: அமைச்சர் செங்கோட்டையன்

பிற செய்தி | கோயம்புத்தூரில் வீட்டிற்குள் 35 குட்டிகளை போட்ட கண்ணாடிவிரியன் பாம்பு

இன்று காலை 10 மணி அளவில் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி (CM Edappadi K. Palaniswami), சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.

முன்னதாக, இதுக்குறித்து கடந்த சனிக்கிழமை திருச்சியில் (Tiruchirappalli) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், "ஜூன் 29 அன்று சென்னையில் சுகாதார நிபுணர்களுடன் ஒரு சந்திப்பு நடத்துகிறோம். அவர்களின் பரிந்துரைகளைக் கேட்டு, மத்திய அரசிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்ற பிறகு, முழுமையான ஊரடங்கு குறித்து முடிவு செய்வோம்" என்று அவர் கூறினார்.

தமிழக மாநில சுகாதாரதுறை அமைச்சகத்தின் அறிக்கை படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 3,940 கொரோனா (COVID-19) தொற்றுகள் மற்றும் 54 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 82,275-ஆகவும், செயலில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை 35,656-ஆகவும் உள்ளன என்று மாநில சுகாதார புல்லட்டின் குறிப்பிட்டுள்ளது.

Trending News