தமிழ்நாட்டில் செப்டெம்பர் 30 வரை ஊரடங்கு, ஈ-பாஸ் முறை ரத்து.. மேலும் விபரம் உள்ளே..!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில், செப்டெம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல விதமான நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 30, 2020, 07:49 PM IST
  • மெட்ரோ ரயில் சேவை செப்டெம்பர் 7 முதல் தொடங்கும்.
  • உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்க அனுமதி.
  • அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ரிசார்டுகள், கேளிக்கை விடுதிகள் இயங்க அனுமதி
தமிழ்நாட்டில் செப்டெம்பர் 30 வரை ஊரடங்கு, ஈ-பாஸ் முறை ரத்து.. மேலும் விபரம் உள்ளே..!! title=

தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கில் சில தளர்வுகள் மற்றும் கட்டுபாடுகள் உள்ளன. அதே போன்று பல தளர்வுகள் மற்றும் கட்டுபாடுகளுடன் ஊரடங்கு செப்டெம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி, விரிவான அறிக்கையை வெளியிட்டார்.

1. ஈபாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. மக்கள் E-Pass இன்றி பயணம் செய்யலாம். எனினும் வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வருவதற்கான ஈ-பாஸ் முறை தொடரும்.

2. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் தரிசனம் அனுமதி. ஆனால், குறிப்பிட்ட அளவு மக்களுக்கு மட்டுமே அனுமதி. அனைது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடைபிடிக்கப்பட வேண்டும்

3. மாவட்டங்களுக்கு உள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தும் சென்னை பெரு நகர போக்குவரத்து சேவை 1.9.20 முதல் தொடங்குகிறது.

4. மெட்ரோ ரயில் சேவை செப்டெம்பர் 7 முதல் தொடங்கும்.

5. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வணிக வளாகங்கள், ஷோரூம்கள் இயங்க அனுமதி. ஆனால், வணி வளாகம் அதாவது மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை
6. அனைத்து விதமான கடைகளும் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

7. உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்க அனுமதி.

8. தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.

9. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ரிசார்டுகள், கேளிக்கை விடுதிகள் இயங்க அனுமதி

10. உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளுக்காக, விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி.

Trending News