திண்டுக்கல் அடுத்த ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம்பட்டியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் 15 அடி உயரத்தில் காவல் தெய்வமான சங்கிலி கருப்பு, சிலை உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்று சங்கிலி கருப்புக்கு நள்ளிரவில் அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி (21-3-23) நேற்று அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு கோவிலில் நடைபெற்றது.
மேலும் படிக்க: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க என்ன தயக்கம்?... சீமான் கேள்வி
பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம் ஆகிய 5 நறுமணப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. எலுமிச்சை பழ மாலை, பூ மாலை மற்றும் 15 வகையான மதுபானங்கள் கொண்டு மாலை செய்து அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து குவாட்டர் ஊற்றி சங்ஙிலி கருப்பனுக்கு அபிஷேகம் செய்தனர். அப்போது அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆடு பலியிட்டு, அசைவம் செய்து படையலிட்டு வழிபாடு நடத்தினர். அமாவாசை அன்று நள்ளிரவில் காவல் தெய்வத்திற்கு விருப்பமான உணவுகள் படைத்து வழிபட்டால் சாந்தமடைந்து ஊரை காப்பார் என்ற ஐதீகத்தில் வழிபாடு நடத்தப்படு வருகிறது. தங்களது தொழில் சிறக்கவும் நாடு செழிக்கவும் நள்ளிரவு சிறப்பு வழிபாட்டில் தொடர்ந்து பங்கேற்று வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை, பணம் கொள்ளை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ