காமராஜர், கலைஞரை போல் எனது ஆட்சியில் பொற்காலம் - முதலமைச்சர் பெருமிதம்!

காமராஜர் காலம் பள்ளிக்கான பொற்காலம்,  கலைஞரின் காலம் கல்விக்கான பொற்காலம், இதேபோல் எனது ஆட்சிக்காலம் உயர்கல்விக்கான பொற்காலமாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Written by - Arunachalam Parthiban | Last Updated : May 16, 2022, 04:35 PM IST
  • சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா
  • முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரே மேடையில் பங்கேற்பு
  • மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி முதல்வர் சிறப்புரை
காமராஜர், கலைஞரை போல் எனது ஆட்சியில் பொற்காலம் - முதலமைச்சர் பெருமிதம்! title=

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி, ''சென்னை பல்கலைகழகத்தில் படிப்பதே பெரிய கவுரவம். கல்வியும், சுகாதாரமும் தனது இரு கண்கள் என்று செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளுக்கு காரணம். முதலமைச்சர் படித்து பட்டம் பெற்றதும் சென்னை பல்கலைக்கழகத்தில் தான். 

இந்திய அளவில் உயர்கல்வி பெற்று இருப்பவர்களில் 53 சதவீதம் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கல்வி மாநில பட்டியலில் இருந்தால் தமிழகத்தில் கல்வியின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பியதற்காக ஆளுநருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என தெரிவித்தார். Stalin

இதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழா மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  "இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்கு காரணமானவர்களை உருவாக்கிய சிறப்பு சென்னை பல்கலைக்கழகத்திற்கு உண்டு. தமிழக மக்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நான் அனைத்து மாணவர்களையும் முதல்வனான மாற்ற உருவாக்கிய திட்டம் தான் "நான் முதல்வன்" திட்டம். மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கலை வழங்க இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அண்ணா டூ ஸ்டாலின் - கோட் சூட்டில் மாஸ் காட்டிய முதலமைச்சர்கள்

எந்த இளைஞரும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், எந்த நிறுவனமும் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்றும் கூறாத நிலை ஏற்பட வேண்டும். இதனை செயல்படுத்துவதற்கு தேவையான திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நிதி நெருக்கடி இருந்தாலும் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

University

தற்போது நடைபெறும் ஆட்சி மாணவர்களுக்கான ஆட்சி. திருநங்கைகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி வழங்கப்படும் என்ற திட்டத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குழந்தைகளுக்கு பெற்றோர் அளிக்கும் சிறந்த சொத்து கல்வி தான். காமராஜர் ஆட்சிக்காலம் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம், கலைஞர் ஆட்சிக் காலம் கல்லூரிகளின் பொற்காலம் என்பதைப் போல, எனது தலைமையிலான ஆட்சிக் காலம் உயர்கல்வித் துறையின் பொற்காலமாக மாற வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக திகழும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் படிக்க | "மாநகரத் தந்தை" முதல் "தமிழக முதல்வர்" வரை - மு.க.ஸ்டாலின் குறிப்புகள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News