TASMAC Leave : நாடாளுமன்ற தேர்தலால் டாஸ்மாக் லீவ்! மது கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்..

Latest News TASMAC Leave : நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நாளன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Apr 17, 2024, 08:40 AM IST
  • நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி அரசு விடுமுறை
  • டாஸ்மாக் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டம்
  • திருவாரூர் கடைகளில் வரிசையில் நின்ற மதுப்பிரியர்கள்
TASMAC Leave : நாடாளுமன்ற தேர்தலால் டாஸ்மாக் லீவ்! மது கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்.. title=

Latest News TASMAC Leave : 2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி (நாளை மறுதினம்-வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையடுத்து, இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தேர்தல் நாளன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. 

திருவாரூர் மதுக்கடைகளில் குவிந்த கூட்டம்:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 17 ந் தேதி முதல் 19 ந் தேதி வரை 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு 
விடுமுறை ... இதனால் மது கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தேர்தலை தொடர்ந்து எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தேர்தல் நடத்தும் அலுவலர்கள் , காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் ,

மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எழுப்பியிருக்கும் 30 கேள்விகள்!

இதன்படி  17 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை திருவாரூர் மாவட்டஆட்சியர் அறிவித்திருந்தார் ,
மேற்படி ஆணையை செயல்படுத்த தவறும் பட்சத்தில் தொடர்புடைய மற்றும் மதுபானக்கடைகளின் மேற்பார்வையாளர்கள், பார் உரிமதாரர்கள் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ,என திருவாரூர் மாவட்டஆட்சியர் தி.சாருஸ்ரீ அறிவித்துள்ளார் ,

சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையரின் வழிகாட்டுதலின்படி  நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் அனைத்து கடைகளும் 17 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது ,

இதனால் திருவாரூரில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்  ஜூன் மாதம் 4 -ந் தேதி   விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஜிகே மணியிடம் பதவியை பிடுங்கியவர் அன்புமணி - எடப்பாடி பழனிசாமி வீசிய புதுகுண்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News