இளைஞர்கள் இடையே சமீப காலமாக போட்டோஷூட், மோகத்தால் ஆபத்தில் மாட்டிக்கொள்கின்றனர். அந்த வகையில், ஒரு இளைஞர் கழிவுநீர் தேங்கியிருந்த தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐடிஐ முடித்த இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். தனது நண்பர்கள் 8 பேருடன் எர்ணாவூர் குப்பம் அருகில் புதர் மண்டி கழிவு நீர் மழை நீர் சேர்ந்திருக்க கூடிய குட்டை பகுதிக்கு போட்டோ ஷீட் எடுக்க சென்றுள்ளார். கழிவு நீர் தேங்கிய குட்டையானது முன்னொரு காலத்தில் சிபிசிஎல் நிறுவனத்தில்"இருந்து சுடுதண்ணீர் கடலுக்கு செல்ல அமைக்கப்பட்டிருந்த பாதையாக இருந்ததென கூறப்படுகிறது
பராமரிப்பில்லாத இந்த குட்டையின்" அருகே இளைஞர்கள் ஆரவாரமாக செல்பி எடுக்க அவ்வழியாக சென்ற ஒருவர் அதன் அபாயத்தை கூறி வெளியேறும் படியாக குரல் எழுப்பியதால் இளைஞர்கள் 8 பேரும் அவசரஅவசரமாக ஓடி வந்துள்ளனர்
மேலும் படிக்க | 'விராட் கோலி ஏன் டி20 உலகக் கோப்பைக்கு தேவை...' - வதந்திக்கு கொந்தளித்த Cheeka!
கரைக்கு வந்து பார்ந்தபின்னரே கிரன்ராஜ் காணாமல் போனதை கண்டறிந்துள்ளனர் பின்னர் குட்டை பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு கிரண்ராஜ் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்து சடலமாக மிதந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார் சடலத்தை மீட்டு அரசு ஸ்டான்லிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர் போட்டோ ஷீட் மீது கொண்ட மோகத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | திண்டுக்கல் மக்களவைத் தொகுதி களம் காணும்.. யார் இந்த தோழர் ஆர். சச்சிதானந்தம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ