சிசிடிவியில் உள்ளவர்கள் தான் சரண்டரானவர்களா? இயக்குனர் அமீர் சரமாரி கேள்வி!

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சிசிடிவியில் உள்ளவர்கள் தான் சரண்டரானவர்களா? இதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். யாரும் மறைத்து விட முடியாது என இயக்குனர் அமீர் பேட்டி அளித்துள்ளார்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jul 10, 2024, 03:50 PM IST
  • உளவுத்துறை தகவல்கள் சரியாக இருந்ததா இல்லையா?
  • அது முறையாக பின்பற்றப்பட்டதா இல்லையா?
  • சென்னையில் இயக்குனர் அமீர் பேட்டி.
சிசிடிவியில் உள்ளவர்கள் தான் சரண்டரானவர்களா? இயக்குனர் அமீர் சரமாரி கேள்வி! title=

சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் யோலோ படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,  படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில் வைத்தது குறித்து பேசியவர், ஒரு வேளை படத்தின் கதைக்காக தேவைப்பட்டிருக்கலாம். இதற்கு முன் லியோ, ஆட்டோகிராப் படங்களும் வந்து வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த கதையும் வெற்றி பெறும் என்றும் கூறினார். சமீப காலமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர குலைவு, போதை வஸ்து, கள்ளச்சாராயம், ஆணவ படுகொலை போன்றவை அதிகரித்து வருகிறது என்பது குறித்த கேள்விக்கு, போதை உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும், குஜராத் துறைமுகத்தில் டன் கணக்கில் இறக்குமதி ஆகிறது. அது யார் அனுப்புகிறார்கள் எங்கு போகிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த வகையில் பார்க்கும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக பார்க்கிறோம்.

மேலும் படிக்க | கிசுகிசு : அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக்

நடந்திருக்க கூடிய அசம்பாவிதங்கள் தவிர்த்திருக்கப்பட வேண்டியது தான். அதில் மாற்றமில்லை. கள்ளச்சாராய மரணமாக இருந்தாலும், கட்சி தலைவர் படுகொலையாக இருந்தாலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்காக ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதாக சொல்லி விட முடியாது. அதற்கான நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கிறார்கள். எடுக்காமல் இருந்தால் விமர்சிக்கலாம். நானும் தேவையில்லாமல் பேசினால் அரசியலாக இருக்கும் என்று நினைக்கிறேன். தலித் மக்களின் மீது தொடர்ந்து நடக்கும் வன்முறை, தாக்குதல் குறித்த கேள்விக்கு, அப்படி தனிப்பட்ட முறையில் தலித் தலைவர்கள் பாதுக்காக்கப்படவில்லை. மற்றவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. இதற்குள் அரசியல் இருக்கிறது. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பது எல்லோருடைய எண்ணமாக இருக்கிறது. நிறைய தலைவர்கள் சொல்கிறார்கள்.

சிசிடிவி காட்சிகள் இருக்கிறது. சிசிடிவியில் உள்ளவர்கள் தான் சரண்டரானவர்களா? இதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். யாரும் மறைத்து விட முடியாது. ஒருவேளை அவர்களே ஒப்பு கொண்டாலும் இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜி வைத்து இல்லை என்று நிரூபிக்க முடியும். யாரும் அதே மறுத்து விட முடியாது. தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது ஒரு அரசியல் தானே தவிர எல்லோருக்குமே பாதுகாப்பு வேண்டும். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் தான் சார்ந்திருக்கும் சமூகத்தில் எல்லோராலும் போற்றப்படும் ஒரு நபராக இருந்திருக்கிறார். தன் சமூகத்தில் உள்ளவர்களே கல்வியில் முன்னேற்றி வழக்கறிஞர்களாகவும் மாற்றி இருக்கிறார். இதுபோல பல திட்டங்களை செயல்படுத்திய ஒரு தலைவராக இருந்திருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. நடந்தது ஒரு துயரச் சம்பவம் தான். அதற்காக தலித்தை தனியாக பிரித்துப் பார்க்கும் அரசியலை  நான் செய்ய விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் காவல் ஆணையர் மாற்றப்பட்டது &  கள்ளக்குறிச்சியில் அதிகாரிகள் மாற்றப்பட்டது குறித்து பேசியவர், அரசால் அதிகாரிகளை தான் மாற்ற முடியும். அங்கிருக்கும் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மாற்றுவது மக்களிடம் தான் இருக்கிறது. நீங்கள் அடுத்த முறை வாக்கு செலுத்தும் போது அந்த கட்சியை சார்ந்தவர்களுக்கு வாக்கு செலுத்தாமல் இருப்பது மக்களிடம் தான் இருக்கிறது. ஒரு தவறு நடந்திருக்கும் இடத்தில் அரசு நேரடியாக கள்ளச்சாராயம் காய்ச்சுகிறது என்று சொல்வது ஏற்க முடியாது. போலீஸிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்ச சொல்லி ஒரு அரசு சொல்லுமா, ஒரு அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்லுவார்களா? அதில் என்ன வருமானம் வந்துவிடும். ஒரு சிறிய வருமானத்திற்கு ஆசைப்பட்டு அந்தந்த பகுதியில் இருக்கும் காவல்துறை அதிகாரி செய்யும் தவறு. அந்த தவறு செய்தவர்களை விசாரணைக்கு உட்படுத்தி அவர்களை பணி நீக்கம் அல்லது பணியிட மாற்றம் செய்வது என்பது சரியான நடவடிக்கை தான்.

மேலும் படிக்க | கிசுகிசு : சினிமா வாரிசு பக்கம் இணைய ரெடியாகும் பெரிய தலைகள்..! அவரும் வர்றாமே?

சென்னையில் இன்றைக்கு இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது உளவுத்துறை தகவல்கள் சரியாக இருந்ததா இல்லையா, அது முறையாக பின்பற்றப்பட்டதா இல்லையா? அப்போது கமிஷனர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.‌ அதனால் வேறு ஒரு கமிஷனரை மாற்றி இருக்கிறார்கள்.‌ இது சரியான நடவடிக்கை தான் இதையெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. போலீசை மாற்றினால் என்ன நடக்கும் என்று கேட்டால், போலீசை மாற்றா விட்டால் என்ன நடக்கும்? போதும் இதே கேள்வி தான் வரும். பாருங்கள் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை இதே கமிஷனர் தான் இருக்கிறார் என்ற கேள்வியும் வரும். மாற்றியதற்கு பின்னால் என்ன நடக்கிறது என்று இனிமேல் தான் பார்க்க முடியும்.

இந்தக் கொலை மட்டுமல்ல இதை விட மோசமான கொலை தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்கிறார். ஒரு தேசத்தில் தலைவரே வெடிகுண்டில் கொல்லப்பட்டார். அதனால் இதுதான் முதல் கொலை என்று கிடையாது. பழனிபாபாவின் கொலை காண குற்றம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த அரசியல் காரணங்களுக்காக இந்த கொலைகள் நடந்து கொண்டு இருக்குமே தான் தவிர, முழுவதுமாக தடுக்க முடியாவிட்டாலும் கொஞ்சம் முன்னேற்பாடாக இருந்திருக்கலாம்.‌ இன்றைக்கு எல்லோரும் தலைவர்களாக நிரம்பி வழிந்து இருக்கிறார்கள்.‌ அப்படி இருக்க அடக்கம் செய்வதற்கான இடம் அவர்களுக்கு அதை கேட்க உரிமை இருக்கிறது. அதைக் கொடுக்கலாமா வேண்டாமா அதற்குப் பின்னால் உள்ள பிரச்சனைகளை பற்றி முடிவெடுக்க வேண்டியது அரசாங்கம் தான்.‌ ஏன் கொடுக்கவில்லை என்று அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் நீதிமன்றத்திலும் சொல்லிவிட்டார்கள் நீதிமன்றமும் வேறு இடத்தில் அடக்கம் செய்ய சொல்கிறார்கள். குடியிருப்பு போதையில் அடக்கம் பண்ண வேண்டாம் என்று சொன்னதாக சொல்கிறார்கள்.

இதற்குப் பின்னால் என்ன அரசியல் ஒளிந்து இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.‌ ஆனால் மேலே சொன்ன காரணங்கள் சரியாக இருக்கும்போது அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதியில் மணிமண்டபம் இருந்தால் ஒவ்வொரு முறையும் அதற்கு விழா எடுக்கும் போதும் பிரச்சினைகளை சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம். அதன் காரணமாக சொல்லி இருக்கலாம் என்று நினைக்கிறேன் தவிர உள்ளே இருக்கும் அரசியல் எனக்கு தெரியாது. கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு 10 லட்சம் கொடுத்தது குறித்து பேசியவர், என் கருத்து அதான். கள்ளச்சாராய மரணத்தில் உடனடியாக அவசரமாக 10 லட்சம் அறிவிக்கப்பட்டதில் எனக்கும் ஏற்பு கிடையாது. தாய் தகப்பனை இழந்த பிள்ளைகளை அரசு பொறுப்பேற்க வேண்டும். பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் எதிர்காலத்தில் நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. இதை கடமையாகவும் பார்க்கிறேன்.

மேலும் படிக்க - லேட் மேரேஜ் செய்யும் இளைஞர்களே கவனம்... பல ஆண்களுக்கு டுமிக்கி கொடுத்த பெண் - இன்னும் சிக்கல

அது மாதிரியான ஆட்களை எடுத்துக் கொள்ளலாமே தவிர இறந்தவர்களுக்கு எல்லாம் 10 லட்சம் என்பது ஏற்புடையதல்ல. உடனே அரசியல் தலைவர்கள் எல்லாம் அங்கே போய் நின்று , மருத்துவமனையில் இருப்பவர்களை பார்த்து ஆறுதல் சொல்வது என்பதை எல்லாம் நல்ல அரசியலாக நான் பார்க்கவில்லை. கள்ளக்குறிச்சி விவகாரம் தமிழகத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் விக்கிரவாண்டி தேர்தலில் எதிரொளிக்குமா என்ற கேள்விக்கு, அதை தேர்தல் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும் எதிரொலிக்குமா இல்லையா என்று இப்போது உறுதியாக சொல்ல முடியாது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் நடந்ததையும் விக்கிரவாண்டியும் தொடர்புபடுத்தி பார்க்கும் அளவுக்கு மக்கள் இல்லை என்று நினைக்கிறேன். மதுவை ஒழிப்பது குறித்து பேசியவர், முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும். இன்றைக்கு கள்ள சாராய காய்ச்சி அதன் பின்புலத்தில் திமுக இருப்பதாக சொல்கிறார்களே.. அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சிவது முதல் நாள்தான் ஆரம்பித்தார்களா? அதற்கு முன் காய்ச்சி விற்றது வேறு கட்சிக்காரர்கள் இல்லையா? வேறு கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினர் அங்கு இல்லையா? அவர்கள் யாரும் பார்க்கவில்லையா?

எல்லோரும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு சம்பவம் நடந்த பிறகு அதை வைத்து ஒரு அரசியல் செய்கிறார்களே தவிர, அதை தடுக்க வேண்டும் என்று நினைத்தால் எல்லோரும் சேர்ந்து தான் தடுத்திருக்க வேண்டும்.‌ அரசு மட்டும்தான் நேரடியாக தடுக்கும் என்று நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இங்கிருக்கும் மற்ற கட்சி காரர்களுக்கும் இந்த பொறுப்பு இருப்பதாக நினைக்கிறேன். அவர்கள் நினைத்திருந்தால் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை அடித்து உடைத்திருக்கலாமே? மற்றதுக்கெல்லாம் போராட்டம் நடக்கும் அதிமுகவினர் , உங்களிடம் தொண்டர்கள் இருக்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சும் இடத்தில் முன்பே போராட்டம் நடத்தி இருக்கலாமே? கள்ளச்சாராயம் காய்ச்சுப் அவர்களை போலீஸில் பிடித்து ஒப்படைத்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை எல்லோரும் எல்லா தவறும் நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தவறு நடந்ததும் ஆளுங்கட்சியை குறை சொல்கிறார்கள். உன்னை நேசிக்க கூடிய தலைவர்கள் வந்தாலும் இந்த குறை இருந்து கொண்டு தான் இருக்கும்.  எல்லோருக்கும் பங்கு இருக்கிறது.

அவர் கையில் அதிகாரத்தை கொடுத்து விட்டால் அவர் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று காத்திருப்பது ஏற்புடையதல்ல என்றும் பாலாவின் வணங்கான் படத்தில் விமர்சனம் குறித்து பேசியவர், பாலாவின் எல்லா படங்களும் விமர்சனங்களையும் தாண்டி தான் வந்திருக்கிறது. ஆனாலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் எனக்கும் அந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. விரைவில் மாயவிளை ரிலீஸ் ஆகும் அதற்கான பணிகளை செய்து வருவதாகவும் கூறினார்.

மேலும் படிக்க - ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு திமுகவின் பதில்... ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News