Lok Sabha Election 2024 NDA Alliance In Tamil Nadu: டெல்லி செல்லும் முன்னர் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஒரு மகிழ்ச்சியான செய்தி... நமது தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்திருக்கிறது. 39 தொகுதிக்கும் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. பாஜகவின் வேட்பாளர்கள் 20 தொகுதியில் நேரடியாக போட்டியிடுகிறார்கள். தாமரை சின்னத்தில் ஒட்டுமொத்தமாக 24 பேர் களம் காண்கிறார்கள்.
கூட்டணி கட்சி தலைவர்கள் அவர்களுக்கான தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியலை தனியாக அறிவிப்பார்கள். எல்லோருக்கும் மரியாதை வழங்க வேண்டும் எல்லோரும் வளர வேண்டும் என்பதன் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
பாஜக வேட்பாளர் பட்டியல்?
திராவிட அரசியலுக்கு மாறுபட்ட அரசியலை பாஜக முன்னெடுத்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார். இன்று மாலையில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம்" என்றார்.
மேலும் படிக்க | பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன அதிமுக! புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
இந்நிலையில், அண்ணாமலை தெரிவித்தபடி பார்த்தோமானால், கூட்டணி கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக 19 மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 தொகுதிகளில் நேரடியாக பாஜக போட்டியிடுகிறது. இதனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு பாஜக ஒரு தொகுதியை கூட ஒதுக்கவில்லை என தெரியவருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி
முன்னதாக, அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டு வரும் மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளதாக பாஜக முடிவெடுத்த பின்னர், டிடிவி தினகரன் - ஓபிஎஸ் அணி ஆகியோரிடம் இணக்கம் காட்டி வந்தது. இதில் டிடிவியின் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், குக்கர் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.
பாமக 10 தொகுதிகளிலும், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதி கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகியவை தலா 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
இதில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகியவை தனிச்சின்னத்திலும் மீதம் உள்ள நான்கு கட்சிகள் தாமரை சின்னத்திலும் போட்டியிடும் என தெரிகிறது. இதன்மூலம், திமுக - அதிமுக - பாஜக என மும்முனை போட்டியில் அனைத்து கூட்டணிகளின் தேர்தல் பங்கீடு நிறைவுபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டுமே இன்னும் தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்காத நிலையில், அதிமுகவில் தேமுதிமுக இன்னும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.
மேலும் படிக்க | அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நெல்லையில் சிம்லா முத்துச்சோழன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ