தொடரும் கனமழை.. 100 ரூபாய் தாண்டிய ஒரு கிலோ வெங்காயத்தின் விலை!!

அண்டை மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழகத்துக்கு (Onion Price In Tamil Nadu) வர வேண்டிய வெங்காயம் குறைந்ததால், பல மாவட்டங்களில் ஒரு கிலோ 100  ரூபாய் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2020, 03:34 PM IST
  • நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தையான லாசல்கானில் வெங்காயத்தின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ .2000 உயர்ந்தது.
  • மகாராஷ்டிரா உள்ளிட்ட தென்னிந்தியாவின் வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கனமழை பெய்ததே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்.
  • தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஒரு கிலோ 100 ரூபாய் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
தொடரும் கனமழை.. 100  ரூபாய் தாண்டிய ஒரு கிலோ வெங்காயத்தின் விலை!! title=

Onion Price In Tamil Nadu: தீபாவளி பண்டிகை காலத்தில் வெங்காயத்தின் விலை மீண்டும் ஒரு ராக்கெட் போல வானத்தை நோக்கி செல்லலாம். நாங்கள் இதைச் சொல்லவில்லை, சந்தை வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த நேரத்தில், சில்லறை சந்தையில் வெங்காயம் (Onion Price) ஒரு கிலோ 40-50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேநேரத்தில் வட இந்திய மாநிலங்களில் உருளைக்கிழங்கின் விலையும் ஒரு கிலோவுக்கு 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் திங்களன்று நாசிக் உள்ள நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தையான லாசல்கானில் (Lasalgaon) , சிறந்த தரமான வெங்காயத்தின் சந்தை விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ .6802 ஐ எட்டியது.

கடந்த 14 ஆம் தேதி, வருமான வரித்துறை (Income Tax) வெங்காய வியாபாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்குப் பிறகு, வர்த்தகர்கள் சந்தைக்கு வரவில்லை. இதனால் சந்தையில் வெங்காயம் வருவது நிறுத்தப்பட்டது. ஆனால் இன்று சந்தை திறந்தவுடன் வெங்காயத்தின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ .2000 உயர்ந்தது.

ALSO READ |  அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கு, வெங்காயம் நீக்கம்!

மகாராஷ்டிரா உள்ளிட்ட தென்னிந்தியாவின் (South India) வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கனமழை பெய்ததே வெங்காய விலை திடீரென அதிகரிப்பதற்கான காரணம். கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெங்காய விலையில் பெரும் தாக்கம் ஏற்பட்டு உள்ளது.

முன்னதாக, இந்த முறை கர்நாடகாவின் பெங்களூரிலிருந்து (Rain in Bengaluru) வெங்காய வரவில்லை. அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக வெங்காய செடிகள் நீரில் மூழ்கி அழிந்தது. மழையின் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அத்தகைய சூழ்நிலையில், வெங்காயத்தின் விலை தொடந்து அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும், மேலும் வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும். லசல்கானில் இன்றைய வெங்காய விலை 6802 ரூபாய் எனவும், அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் வெங்காயத்தின் விலை ரூபாய் 6200 எனவும், தரம் குறைந்த வெங்காயம் ஒரு குவிண்டால் 1500 ரூபாய் எனவும் விற்கப்படுகிறது.

ALSO READ |  நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களில் வெங்காயம், பூண்டு ஏன் சாப்பிடக் கூடாது..!!!

தமிழகத்தில் சுற்றி இருக்கும் அண்டை மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழகத்துக்கு (Onion Price In Tamil Nadu) வர வேண்டிய வெங்காயம் குறைந்ததால், பல மாவட்டங்களில் ஒரு கிலோ 100  ரூபாய் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News