கட்சி பிளவுப்பட்டால்... எம்ஜிஆர் உயிலில் சொல்லியிருப்பது என்ன?

முன்னாள் அமைச்சர் கே.சி. பழனிசாமி எம்ஜிஆர் எழுதிய உயிலை சுட்டிக்காட்டி ட்வீட் செய்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 27, 2022, 04:36 PM IST
கட்சி பிளவுப்பட்டால்... எம்ஜிஆர் உயிலில் சொல்லியிருப்பது என்ன?  title=

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்து, மீண்டும் ஒன்றாக இணைந்து, தற்போது மீண்டும் இரண்டாக மாற இருக்கிறது அதிமுக. ஒற்றைத் தலைமைக்காக எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட தன்னுடைய எல்லா ப்ளான்களையும் அமல்படுத்தி பொதுச்செயலாளர் பதவியை நெருங்கிவிட்டார். ஆனால் ஓபிஎஸ்ஸோ எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கட்டை போட 8 திசையிலும் முயன்று கொண்டிருக்கிறார்.

முதலில் டெல்லிக்கு சென்ற அவர் அடுத்ததாக தமிழக முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதுமட்டுமின்றி இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நடத்திய தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு போட்டியாக நாளை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

edappadi Palanisamy

ஆனால், இபிஎஸ்ஸுக்கு முக்கால்வாசி கட்சி துணை நிற்பதால்; ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர்ந்துவிடுவார் என்றே பலரும் கருதுகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி. பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆரின் உயிலை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ளார்.

 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எம்ஜிஆர் எழுதிய உயிலை பகிர்ந்து, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் 18.01.1987அன்றைய தேதியில்  அதிமுகவில்  உள்ள உறுப்பினர்களில் 80% பேர் ஆதரவை பெற்றவர்கள் தலைமையில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று தன்னுடைய உயிலில் குறிப்பிட்டுள்ளார். அதன்அடிப்படையில் எம்ஜிஆர் தொண்டர்களால் ஒரு தலைமையை தேர்ந்தெடுப்போம்.

 

நிச்சியமாக அது இந்த சுயநலவாதிகளும்,அடிமைகளும்,ஊழல்வாதிகளும் அல்லாத தலைமையை தேர்ந்தெடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | EPSvsOPS : ஓபிஎஸ்-தான் துரோகத்தின் அடையாளம் : ஜெயக்குமார் காட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News