தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட்டதை எதிர்த்து கர்நாடகாவில் முழு அடைப்பு எதிரொலி காரணமாக, தமிழகத்தின் 430 பேருந்துக்கள் கர்நாடகா செல்லவில்லை, ஆனால் கர்நாடகாவில் வழக்கம் போல மாநில அரசு பேருந்துக்கள் இயங்குகின்றன. காவிரியில் தமிழ்நாடு அரசு வினாடிக்கு 24,000 கன அடி நீரை கோரியது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 5,000 கன அடி நீரைத்தான் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில், உச்சநீதிமன்றமும் வினாடிக்கு 5,000 கன அடி நீரை மட்டும் தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. தற்போது நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கும் கூட கன்னட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவின் மண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் பகுதிகளில் முழு அடைப்பு உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
மேலும் படிக்க | ஆசையாய் காதலித்து திருமணம்! மனைவியை கொன்ற கணவர்! அப்புறம் தான் ட்விஸ்டே!
இதனைத் தொடர்ந்து பெங்களூரில் இன்றுபந்த் போராட்டம் நடைபெறும் என கன்னட விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது, இதற்கு 100க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் முழு கடையடைப்பையொட்டி 430 தமிழக பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்புகள் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. அதனையொட்டி அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஓசூர் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் நேற்று இரவு 8 மணி முதல் நிறுத்தப்பட்டது.
சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தமிழக பேருந்துக்கள் ஒசூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது, தமிழகத்தின் நகர பேருந்துக்கள் தமிழகத்தின் மாநில எல்லையான ஜூஜூவாடி வரையில் பயணிகளை இறக்கி விடுகிறது. கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்பில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அரசு பேருந்துக்கள் குறைந்த அளவில் ஒசூர் வழியாகவே இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தமிழக கர்நாடக எல்லைகளான சத்தியமங்கலம், ஓசூர் எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பெரம்பலூருக்கு வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது கர்நாடக விஷயத்தில் தேசியக் கட்சியாக இருந்தாலும் அங்கு வெற்றி பெறுகின்ற போது, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாநில கட்சிகளாக மாறி விடுகின்றன. தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கூறும் கர்நாடக அரசு, நெய்வேலி மின்சாரத்தையும் தமிழகத்தில் இருந்து கிடைக்கும் பெட்ரோலையும் வேண்டாம் என்று சொல்லுமா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பாஜக, அதிமுக கூட்டணி அமையும் பட்சத்தில் அண்ணாமலைக்கும் அதிமுகவினருக்கும் இடையே உரசல் நீடித்துக் கொண்டே இருக்கும். இதனால் அவர்கள் அண்ணாமலையை மாற்றச் சொல்லி பாஜக தலைமையை வற்புறுத்தலாம் மாற்றுவதற்கும் வாய்ப்பும் உள்ளது இதற்கு ஆருடம் சொல்ல முடியாது என்றார்.
தமிழகத்திற்கு காவிரி நீரை தராத கர்நாடக அரசின் செயல்பாட்டினால் தஞ்சாவூரில் ஒரு விவசாயி மாரடைப்பினால் உயிரிழந்திருக்கிறார். இந்த நிலையில் அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக கர்நாடகாவில் திமுகவினர் வேலை செய்தது எந்த விதத்தில் நியாயம் என்றார். கர்நாடகாவில் ஆட்சி செய்யும் பொழுது பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அந்த மண்ணின் மக்களின் உரிமைக்காக நிற்கிறார்கள். ஆனால் தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக நமது மக்களுக்காக எதையும் செய்யவில்லை . உண்மையாக இல்லை. அவர்களுக்க துணை போகிறார்கள், மேலும் தமிழகத்திற்கு தரவேண்டிய நீர் பங்கீட்டை தராமல், கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது தொகுதி பங்கீடு கொடுப்பது எந்த விதத்தில் நியாயமாகும் என்றும், இவர்களோடு கூட்டணி இல்லை என்று திமுக அறிவிக்குமா என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஒன்றரை லட்சம் பைக் வெறும் ரூ.8,000 தான்..! பலே பைக் திருடர்கள் சிக்கியது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ