தமிழகத்தில் நாளையுடன் முடிவடைகிறது கத்திரி வெயில்...

கத்திரி வெயில் தமிழகத்தில் நாளையுடன் முடிவடைய உள்ளதால், வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றது!

Last Updated : May 28, 2019, 10:49 AM IST
தமிழகத்தில் நாளையுடன் முடிவடைகிறது கத்திரி வெயில்... title=

கத்திரி வெயில் தமிழகத்தில் நாளையுடன் முடிவடைய உள்ளதால், வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றது!

கடந்த 5-ஆம் தேதியன்று தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கியது. ஏற்கனவே வெயில் கொளுத்தி வந்த நிலையில், கத்திரி வெயிலால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது.

சுட்டெரித்த வெயிலால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது.  அனல் காற்றால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

கத்தரி வெயிலால் சென்னை, திருத்தணி, வேலூர், மதுரை, கரூர், சேலம், தர்மபுரி, திருச்சி, நாகை உள்ளிட்ட இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

கோடைகாலத்தில் அவ்வப்பொழுது மழை பெய்யும். ஆனால் இந்தாண்டு குறிப்பிடும்படி மழை பெய்யவில்லை. எனவே அதிக வெயிலால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில், மக்களை வாட்டி வதைத்த கத்திரி வெயில் நாளையுடன் முடிவடைகிறது என்னும் நல்ல செய்தி வெளியாகியுள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Trending News