ஹிஜாப்க்கு பைபை... பைபிள் பிரச்சனைக்கு வெல்கம்..! கர்நாடகாவில் மீண்டும் சர்ச்சை!

கர்நாடக உயர்நீதிமன்றம் மத அடையாளங்களை பள்ளியில் பயன்படுத்த தடை விதித்துள்ள நிலையில், இப்படி ஒரு உறுதிமொழியை பெற்றோர்களிடம் இருந்து வாங்கி இருப்பது சட்டத்தை அவமதிக்கும் செயல் என வலதுசாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 25, 2022, 02:15 PM IST
  • ஹிஜாப் பிரச்சனையை தொடர்ந்து பைபிள் சர்ச்சை
  • கர்நாடகாவில் வலதுசாரிகள் எதிர்ப்பு
  • இது தேவையற்ற பிரச்சனை என சிலர் கருத்து
ஹிஜாப்க்கு பைபை... பைபிள் பிரச்சனைக்கு வெல்கம்..! கர்நாடகாவில் மீண்டும் சர்ச்சை! title=

கர்நாடகாவில் சில வாரங்களுக்கு முன்பு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தக்கப்பட்டதற்கு எதிராக மிகப்பெரிய அளவில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் தற்போது பைபிள் குறித்தும் ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் ஹிஜாப் பிரச்சனை தொடங்கியது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை வகுப்புக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், போராட்டம் வெடித்தது. இதுகுறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மாணவிகள் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணி அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

மேலும் படிக்க | புதுச்சேரியில் அமித்ஷாவின் வருகைக்கு தீவிர எதிர்ப்பு! 200 பேர் கைது

இந்த சிக்கல்களை அடுத்து கர்நாடகாவில் சில இந்து கோயில்களின் முன்பு இருந்த இஸ்லாமிய கடைகள் சூறையாடப்பட்டன. அதோடு இறைச்சி விற்பனை செய்வதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்சனைகள் எல்லாம் சற்று ஓய்ந்த நிலையில், தற்போது மற்றொரு பிரச்சனை வெடித்துள்ளது.

School Issue

கர்நாடகாவில் உள்ள பெங்களூரு கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் கிருஸ்துவர்களின் புனித நூலான பைபிளை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று பெற்றோர்களிடம் உறுதிமொழியை எழுதி வாங்கியுள்ளனர். இதனையடுத்து இதற்கு வலதுசாரிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | தொடர்ந்து வெடிக்கும் மின்சார ஸ்கூட்டர் பேட்டரி; விஜயவாடாவில் ஒருவர் பலி

கர்நாடக உயர்நீதிமன்றம் மத அடையாளங்களை பள்ளியில் பயன்படுத்த தடை விதித்துள்ள நிலையில், இப்படி ஒரு உறுதிமொழியை பெற்றோர்களிடம் இருந்து வாங்கி இருப்பது சட்டத்தை அவமதிக்கும் செயல் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அதோடு இது குறித்து பேசியுள்ள ஜனஜக்ருதி சமிதியின் மாநில செய்தித் தொடர்பாளர் மோகன் கவுசா, “பைபிளை படிக்க கிறிஸ்துவர்கள் அல்லாத மாணவர்கள் வற்புதுத்தப்படுகின்றனர்” என்று புகார் தெரிவித்துள்ளார். 

Bible Image

கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியின் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களின் ஆன்மீக நலனுக்காக காலையில் பள்ளி தொடங்கும் முன் நடைபெறும் மாணவர் கூட்டத்தில் பைபிள் வசனங்கள் படிக்கப்படும் என்று எழுதி வாங்குவதாக சில அதிகாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது தான் ஹிஜாப் சர்ச்சை சற்று ஓய்ந்துள்ள நிலையில், வலதுசாரிகள் அடுத்து பைபிளை வைத்து பிரச்சனையை தொடங்க திட்டமிடுவதாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News