இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்

Kanimozhi: கனிமொழி தூத்துக்குடியில் பேசும்போது ஏழை, எளிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுத்து, அவர்களை படிக்க விடாமல் செய்யும் பாஜக தான் உண்மையாகவே இந்துக்களுக்கு எதிரான கட்சி என குற்றம்சாட்டினார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 16, 2024, 07:02 AM IST
  • இந்துகளுக்கு எதிரான கட்சி திமுக
  • இட ஒதுக்கீட்டை கொடுக்க மறுப்பு
  • தூத்துக்குடியில் கனிமொழி பேச்சு
இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட் title=

தூத்துக்குடியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி, திமுகவை இந்துகளுக்கு எதிரான கட்சிபோல் பாஜக சித்தரிப்பதாகவும், ஆனால் இந்துக்களுக்கு உண்மையாகவே எதிராக செயல்படும் கட்சி என்றால் அது பாஜக தான் என குற்றம்சாட்டியுள்ளார். மாநில உரிமையை மீட்டெடுக்கும் பொருட்டு தமிழக முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் இந்தியா  கூட்டணி சார்பில் தேர்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்றன. 

மேலும் படிக்க | “ஒன்லி ஹிந்திதான்” கோவில்பட்டி ரயில் நிலைய ஊழியரின் செயலால் மக்கள் அவதி!

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், " பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், இந்திய நாடு தோற்றுவிடும். அவர்களது வெற்றி இந்தியாவின் தோல்வியாக அமையும். இந்தியா கூட்டணியின் மேற்கு வங்கத்தில் மாற்ற முடியாத சக்தியாக மம்தா பானர்ஜி இருக்கிறார். கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியவில்லை. தமிழகத்தில் அவர்கள் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. வரக்கூடிய தேர்தலில் இந்த நாடு நிச்சயமாக வெற்றி பெறும். மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி தூக்கி எறியப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் மக்கள் நினைத்தால் மாற்ற முடியாதது எதுவுமே இல்லை. திராவிட முன்னேற்ற கழகம் நினைத்தால் மாற்ற முடியாத நிலை இல்லை. 

தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் பாரதிய ஜனதா கட்சி 1294 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் நிதி திரட்டி உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் பெண்களையும் குறைந்தது பத்தாவது வரை படிக்க வைத்த ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. திமுகவை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என சித்தரிக்கிறார்கள். எந்த மதத்திற்கும் திமுக எதிரானவர்கள் இல்லை. ஏழை எளிய மக்கள் படிக்கக்கூடாது உயர்ந்த நிலைக்கு வரக்கூடாது என நினைக்கும் கட்சியினரை இந்துக்களுக்கு எதிரானவர்கள். இட ஒதுக்கீட்டை மறுத்து ஏழை எளிய மக்களை படிக்க விடாமல் தடுக்கும் பாரதிய ஜனதா கட்சியினரே இந்து மக்களுக்கு எதிரானவர்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெறும்." என்றார்.

மேலும் படிக்க | திமுக நகர்மன்ற தலைவரின் கணவர் அட்டூழியம்! வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News