தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி -கமல்!

ஏழைத் தமிழ் மாணவர்களை  கேரளத்திற்கும்,  ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரித்துள்ளார்.

Last Updated : May 4, 2018, 06:04 PM IST
தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி -கமல்!  title=

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் இருந்து துவங்கினார். மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மைதானத்தில் அவர் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் பெயரையும் அறிமுகம் செய்து வைத்தார். மக்கள் நீதி மய்யம் என்பது தான் கட்சியின் பெயர். 

இந்நிலையில், ஊழலுக்கு எதிரான 'மைய்யம் விசில்' செயலியை மக்கள் நீதி மைய்யம் தலைவர் நேற்று வெளியிட்டார். அதன் பிறகு அவர் தான் தத்தெடுத்த கிராமத்தை கமல்ஹாசன் பார்வையிட்டும், மக்களை சந்தித்து பேசிவருகிறார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசன் சமூக பிரச்சனைக்களை எதிர்த்து சமூக வலைத்தளங்களை கேள்விகளை கேட்டு வருகிறார். 

இந்நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, வரும் ஞாயிற்றுக்கிழமை மே 6-ம் தேதி நடக்கவிருக்கும் ‘நீட்’ தேர்வை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் எழுத உள்ளனர். அவர்களுக்கு, கேரளாவிலும் ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளனர். 

தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டதால், மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ நிர்வாகம் அறிப்பை வெளியிட்டது. தேர்வு மையங்கள் ஒதுகீடு செய்யப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும். பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தி, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்க அவகாசம் இல்லை என்று சி.பி.எஸ்.இ பதிலளித்தது. தமிழக மாணவர்கள் சி.பி.எஸ்.இ ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்து, டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த டிஜிட்டல்  இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை  கேரளத்திற்கும்,  ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி என்று குறிப்பிட்டுள்ளார்,  இங்கிருந்தே  எழுதலாமே? என்று கேள்வி எழுப்பி உள்ள கமல்ஹாசன்,  அதற்கு  ஆவன செய்யட்டும்  அரசும்  ஆணையும் என்று தெரிவித்துள்ளார்.

 

Trending News