குறைந்த வயதில் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற உலகின் 2-வது வீரர் என்ற சாதனயை 8-ம் வகுப்பு மாணவரான பிரக்ஞானந்தா படைத்துள்ளார். அவரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
இதைக்குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பத்திரிக்கை செய்தி சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியதாவது,
12 வயதில் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவன் பிரக்ஞானந்தாவின் சாதனை தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கிடைத்த பெருமை என்று பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபுவை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை கூறியபோது கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அவரின் குடும்ப சூழ்நிலையும் தாண்டி நாட்டிற்கு சேர்ந்த பெருமையால், அவர்பால் நமக்கிருக்கும் நம்பிக்கையும், நன்றியையும் அதிகரிக்கச் செய்கிறது என்று பாராட்டி உள்ளார்.
மேலும் சிறுவன் பிரக்ஞானந்தா நாடு திரும்பிய உடன் அவரை கமல்ஹாசன் சந்திக்க உள்ளார் என்றும் கூறப்பட்டு உள்ளது.
Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan congratulates the Youngest Grandmaster of India.#MakkalNeedhiMaiam #KHforTN#Nammavar pic.twitter.com/gORWaRdzpv
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) June 25, 2018