அண்ணா பல்கலைக்கழகத்தில் (AU) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow (JRF) மற்றும் Technical Assistant பணிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Junior Research Fellow (JRF) – 3
Technical Assistant (TA) – 1
விண்ணப்பிப்பதற்கான தகுதி:
Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Power Systems Engg / Power Electronics and Drives பாடப்பிரிவில் கட்டாயம் M.E / M.Tech டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.
மேலும் படிக்க | Indian Railways: அடேங்கப்பா; இந்திய ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய்
அதேபோல், Technical Assistant (TA) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் EEE பாடப்பிரிவில் கட்டாயம் B.E டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.
மேலும், GATE / NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, Power electronics hardware and instrumentation துறையில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் வாயிலாக மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் குறித்த கூடுதல் விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே இந்த இணையப்பக்கத்தில் சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
அதனை சரியாக பூர்த்தி செய்து பணிக்கு தகுந்தாற்போல் கீழே, gomesceg@gmail.com, svapowersystems@yahoo.com, vg_sree@annauniv.edu ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு மே 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!