ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி

 ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருக்கிறது. அவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2021, 11:31 PM IST
  • VK சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு
  • தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
  • 27ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு
ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி title=

பெங்களூரு: ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருக்கிறது. அவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 2017 பிப்ரவரி முதல் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். சசிகாலாவின் (Sasikala)  நான்கு ஆண்டுகால சிறை தண்டனை முடிவடைந்து அடுத்த வாரம் வெளியில் வரும் நிலையில் அவரின் உடல்நிலை மோசமாகியிருக்கிறது.

ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா (Sasikala) விடுதலை செய்யப்படவுள்ளதாக கர்நாடகா சிறைதுறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அவரது விடுதலை நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழக தேர்தல் களத்தில் பல பரபரப்பான நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின. சசிகலாவின் குடும்பத்தினரும், அமமுக (AMMK) கட்சியினரும் அவரது விடுதலைக்காக பலமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சசிகலா விடுதலை ஆவதற்கு மிகவும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சலும், மூச்சுத்திணறலும் இருந்ததாகவும், இதனையடுத்து சிறைத்துறை மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ: சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலாவுக்கு Covid-19?

நேற்று, அதாவது ஜனவரி 20 அன்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடையவே அவர் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு பெங்களூரு (Bengaluru) சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பல மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சோதனைகளின் முடிவில் அவருக்கு நீரிழிவு பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம், சளி, காய்ச்சல், ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவருக்கு செய்யப்பட்ட முதல்கட்ட கொரோனா (Corona) தொற்று ஏற்பட்டிருக்கக்கூடுமோ அன்ற அச்சமும் பரவியது. எனினும், முதல்கட்ட பரிசோதனையில்  அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  

ஆனால் இன்று வெளிவந்த அடுத்தகட்ட பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read | சசிகலாவின் உயிருக்கு ஆபத்து: திவாகரன் கிளப்பிய சந்தேகத்தால் பரபரப்பு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News