மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக சார்பில் முதலைமைச்சர் மற்றும் துணை முதலைமைச்சர், அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள் சார்பில் ஊர்வலம் நடைபெற உள்ளதால் காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா சாலையில் வரும் வாகனங்கள் சிவானந்த சாலை மற்றும் வாலாஜா சாலையில் செல்ல அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் நேருக்கு நேர் அண்ணாசாலையில் சென்று தங்களது இலக்கினை அடையளாம். இதே போன்று தெற்கிலிருந்து வரும் வாகனங்கள் காந்தி சிலை சந்திப்பிலும், வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் போர் நினைவு சின்னம் சந்திப்பிலும் திருப்பப்படும்.