ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழ்தான் - ஜோசியம் சொல்லும் ஜெயக்குமார்

Erode East By Polls: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழேதான் வாக்குபெறுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 22, 2023, 01:42 PM IST
  • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு இதில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • பாஜகவின் முடிவுக்கு அதிமுகவின் இரு தரப்பும் காத்துக்கிறது.
ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழ்தான் - ஜோசியம் சொல்லும் ஜெயக்குமார் title=

Erode East By-Polls: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனை, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி மற்றும் கோகுல இந்திரா உள்ளிட்டோர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினர்.

அதைத்தொடர்ந்து, அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தேவநாதன்,"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தன்னை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளேன்" என்றார். 

'திமுக பூஜ்ஜியம்'

அதைத்தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,"திமுக அரசு மீது வாக்காளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதை மக்களுக்கு எடுத்து சொல்லி திமுகவுக்கு எதிராக மிக பெரிய வெற்றியை அதிமுக பெறும். 2024 மக்களவை தேர்தலில் திமுக பூஜ்ஜியம். அதேபோல், 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக பூஜ்ஜியம் என மக்கள் பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் அமையும்" என தெரிவித்தார். 

மேலும் படிக்க | இடைத்தேர்தல்: 'நாங்கள் போட்டியிடுவோம், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம்' - ஓபிஎஸ்

ஓபிஎஸ் குஜராத் பயணம் குறித்த கேள்விக்கு,"இந்தியா ஒரு சுதந்திர நாடு. யார் வேண்டுமானாலும் எங்கு  வேண்டுமானாலும் செல்லலாம். எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக கொண்டு சீரும் சிறப்புமாக அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தாம்தான் அதிமுக என ஓபிஎஸ் எவ்வாறு சொல்ல முடியும். அவ்வாறு சொல்வது சட்டரீதியாக தவறு.

அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடம்...

ஏ ஃபார்ம், பி ஃபார்மில்  கையெழுத்தும் போடும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் உள்ளது. 
அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும், அதன்மூலம் அதிமுகவுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்கிற வகையில் திமுகவின் பி டீமாக ஒபிஎஸ் செயல்படுவதாக அதிமுக தொண்டர்கள் பார்க்கின்றனர்.

ஒபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் அவரை மக்கள் சுயேட்சையாகதான் கருதுவார்கள். இந்த தேர்தலில் நோட்டாவுக்கும், கீழே ஒபிஎஸ் சென்றுவிடுவார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளது.

மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தல்: ’அண்ணாமலை வெத்துவேட்டு...காங்கிரஸ் வேட்பாளர் யார்?’ ஈவிகேஎஸ் பேட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News