தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்துவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே உதயநிதியின் ரெட் ஜெயண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரைப்பட உலகில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் என்பது தொடர் குற்றச்சாட்டாக இருந்துவருகிறது.
இதற்கிடையே சமீபத்தில் வெளியான எஃப்.ஐ.ஆர், எதற்கும் துணிந்தவன், ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் உள்ளிட்ட படங்களையும் வெளியிட இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தன்னை கைது செய்யும்போது காவல் துறையினர் வரம்பு மீறி நடந்துகொண்டதாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது தமிழ் திரையுலகை வளரவிடாமல் செய்தது.
மேலும் படிக்க | பீஸ்ட் கொண்டாட்டம், மக்களுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கிய விஜய் ரசிகர்கள்
ஆட்சி அதிகாரம் தற்போது கையில் இருப்பதால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சிறிய தயாரிப்பாளர்களிடமிருந்து குறைந்த விலைக்கு படங்களை கபளீகரம் செய்யும் போக்கு தலை தூக்க்கியுள்ளது. இதுதொடர்ந்து நீடித்தால் திரையுலகில் பூகம்பம் வெடிக்கும் நிலை உருவாகும்” என்றார்.
ரெட் ஜெய்ண்ட்ஸின் தலையீடு கோலிவுட்டில் அதிகம் இருக்கிறது என குற்றச்சாட்டு அதிகரித்துவரும் சூழலில் ஜெயக்குமாரின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை கூட்டியுள்ளது.
மேலும் படிக்க | பொருளாதார நெருக்கடி - பீஸ்ட் மோடுக்கு சென்ற இலங்கை ரசிகர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR