ஜல்லிக்கட்டு: சிறப்பு பூஜையுடன் காளைகளுக்கு பயிற்சி ஆரம்பம்

தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று கோரி லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. 

Last Updated : Jan 25, 2017, 10:47 AM IST
ஜல்லிக்கட்டு: சிறப்பு பூஜையுடன் காளைகளுக்கு பயிற்சி ஆரம்பம் title=

மதுரை: தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று கோரி லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. 

மாணவர்களின் போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியதை தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் காளைகளை தயார்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் சிறப்பு பூஜைகள் போடப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகள் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர், பொதுமக்களும், மாடுபிடி வீரர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு நத்தத்தை அடுத்த கொசவபட்டியில் பிப்ரவரி 10-ம் தேதியும் புகையிலைபட்டியில் 15-ம் தேதியும் பில்லமநாயக்கன்பட்டியில் 22-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 

இதற்காக காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றனர். போட்டியை காண மாணவர்களும், இளைஞர்களும் வரவேண்டும் என்பது கிராம மக்களின் கிராமமக்களின் கோரிக்கையாக உள்ளது. 

சில ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தையங்கள் நடைபெற உள்ளதால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மாடு பிடி வீரர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

Trending News