ஜல்லிக்கட்டு: ஓபிஎஸ் வரவேண்டும் மாணவர்கள் கோரிக்கை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Last Updated : Jan 17, 2017, 04:14 PM IST
ஜல்லிக்கட்டு: ஓபிஎஸ் வரவேண்டும் மாணவர்கள் கோரிக்கை title=

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த போராட்டம் தொடர்ந்து 8 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை போலீசார் கைது செய்தது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. 

இதே போன்று சென்னை மெரினா கடற்கரையில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்த இவர்கள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் செல்லும் வழியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். 

மேலும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்று கூறியுள்ளனர். 

Trending News