ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் திருநெல்வேலியில் 12 வகையான இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் களப் பயிற்சி டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 30, 2020, 09:00 PM IST
  • ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி.
  • வேதா இயற்கை விவசாய பண்ணையில் இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் கட்டாயம் பின்பற்றப்படும்.
ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி title=

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் திருநெல்வேலியில் 12 வகையான இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் களப் பயிற்சி டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் ஈஷா (Isha) விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நம்மாழ்வார் (Nammalvar)அவர்களின் வழிகாட்டுதலில் சத்குருவால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, நெல், கரும்பு, வாழை, தென்னை என பயிர் வாரியான சாகுபடி முறை பயிற்சி, பூச்சி மேலாண்மை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலி மாவட்டம்  மானூர் தாலுகா, அழகிய பாண்டிபுரம் அஞ்சல் செட்டிக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள வேதா இயற்கை விவசாய பண்ணையில்  இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியில் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் உள்ளிட்ட வளர்ச்சியூக்கிகள், செயலூக்கிகள், பூச்சிவிரட்டிகள் போன்றவற்றை தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் களப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

இந்தப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் கொரோனா (Corona) தடுப்பு நடவடிக்கையாக தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் கட்டாயம் பின்பற்றப்படும்.

ALSO READ | “மரம் நட விரும்பு” – மர ஆர்வலர்களுக்கு களம் அமைத்து கொடுக்கும் ஈஷா..!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News