தை முதல் நாளை புத்தாண்டாக அறிவிக்கிறதா அரசு!

தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் மாறி மாறி வரும் நிலையில் தமிழ் புத்தாண்டு குறித்த அறிவிப்புகளும் மாறி மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 30, 2021, 08:50 AM IST
தை முதல் நாளை புத்தாண்டாக அறிவிக்கிறதா அரசு! title=

அதிமுக ஆட்சியில் சித்திரை 1ஆம் தேதியும் திமுக ஆட்சியில் தை 1ஆம் தேதியும் தமிழ்புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் எந்த நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்ற குழப்பத்தில் உள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன், 2022ஆம் ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறைத் தேதிகளைத் தமிழ்நாடு அரசு (TN Govt) வெளியிட்டது. அதில், சித்திரை 1ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டது. தை 1ஆம் (Pongal 2022) தேதியைப் பொங்கல் என்று மட்டும் குறிப்பிட்டது. இந்த அறிவிப்பை சிலர் ஆதரித்தும் எதிர்த்தும் வாதங்கள் பறந்தனர். 

ALSO READ | பொங்கல் பரிசாக 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு - முதல்வர் அறிவிப்பு

இதற்கிடையில் கடந்த 17 ஆம் தேதி பொங்கல் திருநாளுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படி, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். 

pngal

பொருட்கள் விவரம்: பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவை இந்த 20 பொருட்களாகும். 

இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படவுள்ள பொங்கல் சிறப்பு பரிசுக்கான பைகளில் இனிய தமிழ்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பொங்கல் திருநாளை  தமிழ்புத்தாண்டாக அறிவிக்கிறதோ என்று தெளிவாக உணரமுடிகிறது.

ALSO READ | ரூ. 2,079 வெள்ள நிவாரணம்: மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் டி.ஆர் பாலு கோரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News