Bharat Gaurav Special Train: காசிக்கு செல்ல அரிய வாய்ப்பு... புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் - 12 நாள்களுக்கும் முழு சேவை!

IRCTC Bharat Gaurav Train: ஐஆர்சிடிசி சார்பில் 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் வரும் மே 4ஆம் தேதி தொடங்கப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. அந்த ரயில் குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 12, 2023, 10:42 AM IST
  • இந்த ரயிலில் மொத்தம் 752 பயணிக்கலாம்.
  • இந்த ரயில் கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக பயணத்தை மேற்கொள்கிறது.
Bharat Gaurav Special Train: காசிக்கு செல்ல அரிய வாய்ப்பு... புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் - 12 நாள்களுக்கும் முழு சேவை! title=

IRCTC Bharat Gaurav Train: ஐஆர்சிடிசி சார்பில் 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் சுற்றுலா தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஆர்சிடிசி நிர்வாக இயக்குநர் கே.ரவிக்குமார் மற்றும் துணை பொது மேலாளர் (சுற்றுலா) எல்.சுப்பிரமணி ஆகியோர் திருச்சியில் நேற்று (ஏப். 11) செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய அவர்கள்,"ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 4 குளிர்சாதனப் பெட்டிகள், 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன. இதில் 752 பேர் பயணிக்க முடியும். இந்த சுற்றுலா ரயிலின் முதல் ஓட்டத்தில், தென் மண்டலம் சார்பில் புண்ணிய தீர்த்த யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு பம்பர் அறிவிப்பு: விரைவில் ரயில் டிக்கெட்டில் 55% தள்ளுபடி? அப்டேட் இதோ!

இந்த சேவை, மே 4ஆம் தேதி தொடங்கி 12 நாட்கள் மேற்கொள்ளப்படும். இந்த யாத்திரையில் பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாரணாசி, அயோத்தி மற்றும் அலகாபாத் உள்ளிட்ட இடங்களை பார்வையிடலாம். இந்த யாத்திரையின்போது பயணிகள் தங்கும் வசதி, உள்ளூர் போக்குவரத்து, உணவு, மருத்துவ வசதி, பாதுகாவலர் வசதி, சுற்றுலா வழிகாட்டி வசதி உள்ளிட்டவை ஐஆர்சிடிசி சார்பில் வழங்கப்படும்.

கட்டணம் நிர்ணயம்: இதற்கான கட்டணமாக ஒரு நபரின் ஏசி பயணத்துக்கு 35 ஆயிரத்து 651 ரூபாயும், ஏசி அல்லாத பயணத்துக்கு 20 ஆயிரத்து 367 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த யாத்திரையில் பயணம் செல்ல விரும்புபவர்கள் www.irctctourism.com என்ற இணையதளத்திலோ, சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் உள்ள பிரதான ரயில் நிலையங்களிலோ முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பயணிகள் ஏறும் நிலையங்கள்: கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் இந்த ரயிலில், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து பயணிகள் ஏறிக் கொள்ளலாம்" இவ்வாறு அவர்கள் கூறினர். 

முன்னதாக, இந்த கோடை சீசனில் பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் நெரிசலை சமாளிக்கவும் 217 சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் இந்த காலகட்டத்தில் மட்டும் 4,010 பயணங்களை (Trips) மேற்கொள்ளும். இந்தத் தகவலை ரயில்வே அமைச்சகம் நேற்று (ஏப். 11) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சூப்பர் செய்தி!! ஏசி கோச்களின் கட்டணம் குறைந்தது: இந்திய ரயில்வே அளித்த மாஸ் தகவல்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News