5 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமையத்தை சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி உலகின் முன்னணி நிறுவனமான குகா (kuka) இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து கற்றல் மற்றும் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது. இந்த தொழில் நுட்பமானது 1000 பேர் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரத்தில் செய்யக்கூடிய நவீன மிஷின் ஆகும் கார் தொழிற்சாலைகள்… மருத்துவத்துறை… எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல வேலை வாய்ப்பை எளிதாக கையாளக்கூடிய அளவில் இந்த தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்துள்ளது. இதன் மூலம் ஏராளாமான மாணவர்கள் வேலைவாய்ப்பில் பயன் பெறுவர்… இந்திய அளவில் மட்டிமல்லாமல் உலக அளவில் பல Engineers களை நம் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்களை உருவாக்க முடியும் என்பதே இதன் இலக்கு ஆகும். இந்த ரோபோடிக் மிஷினில் பல வகையான வித்தைகளை நாம் எளிதாக கையாள முடியும்.
மாணவர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை KUKA மையத்தின் முதன்மை மண்டல அதிகாரி திரு. ஆலன் ஃபேம்,சென்னை தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் திரு.பார்த்தசாரதி ஸ்ரீராம், ஆகியோர் தொடக்கி வைத்தனர். அதன் பின் பேட்டியளித்த சிஜடி கல்லூரி தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம் மற்றும் KUKA நிறுவனத்தின் மேலாளர் ராகவன், இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோபோடிக் பயிற்சி மையம் தமிழகத்தில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய ரோபோடிக் லேர்னிங் சென்டர் எதற்காக ஏற்படுத்தி இருக்கிறோம் என்றால் தமிழக அரசு தமிழ்நாட்டில் நிறைய தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வெளிநாடுகளில் இருந்து அழைத்து வர உள்ளார்கள். அப்படி வரும் பொழுது எல்லா தொழிற்சாலைகளிலும் ரோபோட்டிக் மிகவும் பயனுள்ளது. வருங்காலத்தில் ரோபோடிக் இன்ஜினியர்கள் நிறைய பேரை உருவாக்க இங்கு ஆரம்பித்திருக்கிறோம் என்றார்.
மேலும், மருத்துவத்துறையில் கிரிட்டிக்கல் சர்ஜரி, எக்ஸ்ரே எம்ஆர்ஐ ஸ்கேன் பிசியோதெரபி போன்றவைகளை சிரமமின்றி எளிதாக கையளும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் ரோபோட் ஒரு மிஷனாக இல்லாமல் டாக்டரின் கையாகவே இருந்து செயல்படும் ரோபோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் இந்தியாவை விட ரோபோட்டில் 30 மடங்கு வளர்ந்து இருக்கிறார்கள். இந்தியாவில் இப்பொழுதுதான் இந்த துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் நிறைய பொருட்களை ஒரே நேரத்தில் உற்பத்தி செய்ய முடியும் அதனால் உற்பத்தி செலவு மிகவும் குறைவாக இருக்கும். 1000 பேர் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரத்தில் செய்யக்கூடிய நவீன மிஷின் ஆகும் கார் தொழிற்சாலைகள்… மருத்துவத்துறை … எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல வேலை வாய்ப்பை எளிதாக கையாளக்கூடிய அளவில் இந்த தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்துள்ளது.
மொபைல் போன்களை ரோபோடிக் இல்லாமல் மேனுபேக்ச்சரிங் பண்ணவே முடியாது. ரோபோட்டிக் வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கும் ஒரு சில வேலைகளை ரோபோடிக் இருந்தால் மட்டுமே செய்ய முடியும். சைனா கொரியா ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள ரோபோட்டிக் பாப்புலேஷனில் ஐந்து சதவீதம் கூட நம் நாட்டில் கிடையாது. ஆனால் இப்போது வருகின்ற காலங்களில் இந்தியா அந்த மார்க்கெட்டை பிடிக்க போகுது வேலைவாய்ப்புகள் இந்தியாவில் அதிகமாக உருவாகும். ஆபத்தான தொழில் மற்றும் மறுபடியும் செய்யக்கூடிய தொழிலில் மக்கள் கலைப்படைந்து விடுவார்கள் பாதிக்கப்படுவார்கள் ரோபோட்டிக் அது போன்று அல்ல இது மக்களுக்கு உதவி பண்ணுவதற்கு தான் நலனை பறிப்பதாக இருக்காது ரோபோட்டிக்கை அசம்பல் செய்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் ரோபோட்டிக்கை இயக்குவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் ஆகவே ரோபோட்டிக்கால் வேலைவாய்ப்பு அதிகமாகவே தவிர குறையாது என்று கூறினர். மேலும்,கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் துறையில் உள்ளவர்கள் தங்களது திறனை வளர்த்து கொள்ளும் வகையில் குறைந்த கட்டணத்தில் ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளிக்கப்படும் என கல்லூரி தலைவர் ஸ்ரீராம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | விஜய்யைக் கண்டு திமுக பயப்படுகிறதா?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ