ISSF World Cup: தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார்..!

சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார்!!

Last Updated : Nov 21, 2019, 01:13 PM IST
ISSF World Cup: தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார்..!  title=

சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார்!!

சீனாவின் புடியான் நகரில் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவனும் தங்கம் வென்றுள்ளார். இவர் 250.8 புள்ளிகளை பெற்றுள்ளார். இதன் மூலம் நடப்பாண்டில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளது. 

முன்னதாக, ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 251.7 புள்ளிகள் பெற்று இளவேனில் தங்கம் வென்றார். 

20 வயதுப் பெண்ணான இளவேனில் வெற்றியைத் தமிழகமே கொண்டாடி வருகிறது. கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர். இளவேனிலுக்கு 3 வயதாக இருக்கும்போது, இளவேனிலின் குடும்பம் குஜராத் - அஹமதாபாத்துக்கு இடம்பெயர்ந்தது. இப்போதும் அங்குதான் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.  

 

Trending News