முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை. தமிழ்நாடு தொழில்துறையில் பீடு நடை போடுகிறது.
2019 ஜனவரியில் 2வது உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும். 2017-18ம் ஆண்டில் 56% கூடுதல் நேரடி அந்நிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. தமிழகம் இந்தியாவிலேயே 2வது சிறந்த பொருளாதாரமாக திகழ்கிறது.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் 2% உள்ஒதுக்கீடு வேலை வாய்ப்பு.
ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டம் 2023ஐ விரைவில் எட்டுவோம். 11 அரசுத் துறைகளிலிருந்து தொழில்நிறுவனங்களுக்குத் தேவையான சேவை எளிதாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக சுற்றுலா துறை சாதனை. தமிழ்நாட்டு மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. எரிசக்தித் துறையில் புதிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது.
சுதந்திர போராட்ட வாரிசு தாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.6,500-லிருந்து 7,500 ஆக உயர்வு.
தியாகிகளின் ஓய்வூதியம் ரூ. 13,000லிருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தப்படும். வீடில்லாத ஏழைகளுக்கு ரூ. 20 கோடியில் வீடுகள் கட்டி தரப்படும். குடிசைகள் அற்ற தமிழகத்தை உருவாக்க அரசு தீவிரம்.
தமிழகத்தில் அனைவரும் குடும்பம் போல வாழ்ந்து வருகின்றனர். சாதி, மதம் மறந்து அனைவரும் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய பெண்கள் வசதிக்காக மகளிர் விடுதி கட்டப்படுகிறது.
பிளாஸ்டிக்கை தடை செய்யும் திட்டத்தை அரசு அமல்படுத்தி வருகிறது. 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் குறுகிய காலத்திலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் மாநில நிதியிலேயே செயல்படுத்தப்படவுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கப்படவுள்ளது.
தென்னையிலிருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அனுமதி. குடிமராமத்து திட்டத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது. ஏரிகளில் படிந்துள்ள மண்ணை மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு இலவசமாக தருகிறோம்.
உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளோம். டெல்டா விவசாயிகள் நலனைப் பாதுகாக்க குறுவை திட்டம். கூட்டுப் பண்ணை முறையை ஊக்குவிக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு.
மழை வரவால் 2 முறை முழுக் கொள்ளளவை அணை எட்டியது. தென் மேற்குப் பருவ மழை காரணமாக மேட்டூருக்கு அதிக அளவில் தண்ணீர். 88 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டுள்ளது
தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா வழி வந்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுகிறது.
தேசிய கொடியை 2-வது முறையாக ஏற்றியது மகிழ்ச்சி. தியாகச் செம்மல்கள் வாழ்ந்த இடம் என்ற பெருமையை பெற்றுள்ளது தமிழகம். சுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம் தான்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது தனது உரையை துவங்கினார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்ட தமிழக முதலமைச்சர்.
நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றுகிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இந்நாளை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி சற்று நேரத்தில் உரையாற்றுகிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.