தமிழகம் & புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மலைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

வெப்பச்சலனம் காரணமாக  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Last Updated : Nov 14, 2019, 04:51 PM IST
தமிழகம் & புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மலைக்கு வாய்ப்பு: வானிலை மையம்! title=

வெப்பச்சலனம் காரணமாக  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது கூர்த்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில்; வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் உள்மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை  நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 2 சென்டி மீட்டர் மழையும், கடலூர், பாம்பன், புதுச்சேரி, பாநாசம் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன.  

 

Trending News