சென்னையில் 38 லட்சம் மதிப்பிலான பிரிட்டிஷ் கரன்சிகள் பறிமுதல்..!!!

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கொரியர் மூலம் கடத்தப்பட்ட 40 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்ட் கரண்சிகளை பறிமுதல் செய்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2020, 09:28 PM IST
  • அட்டை பெட்டியில் வைக்கப்பட்டு கொரியர் செய்யப்பட்ட இந்த பிரிட்டிஷ் பவுண்டு கரன்சி நோட்டுகள் சிங்கப்பூருக்கு அனுப்பட இருந்தன.
  • கொரியர் மூலம் அனுப்பப்பட்ட இந்த அட்டை பெட்டியில், டம்ப்ளர்கள், ஸ்டீல் ப்ளேட்டுகள் இருப்பதாக கூறப்பட்டது
சென்னையில் 38 லட்சம் மதிப்பிலான பிரிட்டிஷ் கரன்சிகள் பறிமுதல்..!!! title=

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கொரியர் மூலம் கடத்தப்பட்ட 40 ஆயிரம் பிரிட்டிஷ் பவுண்ட் கரன்சி நோட்டுகளை அதாவது இந்திய ரூபாயில் சுமார் 38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

 அட்டை பெட்டியில் வைக்கப்பட்டு கொரியர் செய்யப்பட்ட இந்த பிரிட்டிஷ் பவுண்டு கரன்சி நோட்டுகள் சிங்கப்பூருக்கு அனுப்பட்ட கொரியரில் கண்பிடிக்கப்பட்டது.

கொரியர் மூலம் அனுப்பப்பட்ட இந்த அட்டை பெட்டியில், டம்ப்ளர்கள், ஸ்டீல் ப்ளேட்டுகள் மற்றும் மசாலா பொருட்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அதிகாரிகள் அதனை பரிசோதனை செய்ய திறந்து பார்த்த போது, மிக அதிக எடையுள்ள ஸ்டீல் ப்ளேட்டுகளுடன் நடுவில், பிரிட்டிஷ பவுண்டுகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த கொரியரை புக்கிங் செய்த சென்னையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Trending News