சென்னை விமான நிலையத்தில் உள்ளாடையில் வைத்து கடத்தப்பட்ட பணம் பறிமுதல்..!!!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் துபாய்க்கு பயணம் மேற்கொள்ள இருந்த ஒருவரிடமிருந்து 18,600 அமெரிக்க டாலர்களை (₹13.7 லட்சத்துக்கு மேல்) பறிமுதல் செய்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2020, 10:01 PM IST
  • துபாய் செல்லும் அந்த பயணியின் உள்ளாடைகள் கருப்பு நிறை டேப்பால் ஒட்டப்ப்பட்டிருந்தன.
  • அவர் இதனை தனது உள்ளாடை மற்றும் சிகரெட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தார்.
  • சென்னை விமான நிலைத்தில், தொடர்ந்து தங்கம் உள்ளிட்ட பிற பொருட்கள் பிடிபட்டு வருகின்றன.
சென்னை விமான நிலையத்தில் உள்ளாடையில் வைத்து கடத்தப்பட்ட பணம் பறிமுதல்..!!! title=

சென்னை விமான நிலையத்தில், துபாய் செல்லும் பயணி, உள்ளாடை, சிகரெட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த ₹13.7 லட்சத்துக்கு மேலான பணத்தை சென்னை சுங்கத் துறை பறிமுதல் செய்தது.

துபாய் (Dubai) செல்லும் அந்த பயணியின் உள்ளாடைகள் கருப்பு நிறை டேப்பால் ஒட்டப்ப்பட்டிருந்தன.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் துபாய்க்கு பயணம் மேற்கொள்ள இருந்த ஒருவரிடமிருந்து 18,600 அமெரிக்க டாலர்களை (₹13.7 லட்சத்துக்கு மேல்) பறிமுதல் செய்தனர், அவர் இதனை தனது உள்ளாடை மற்றும் சிகரெட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தார்.

அதிகாரிகள் கூறுகையில், சென்னையைச் சேர்ந்த, 26 வயதான சையத் அலி என்ற பயணி, விமானம் புறப்படும் முன் மேற்கொள்ள வேண்டிய இமிக்ரேஷன் வழிமுறைகளை முடித்த பின்னர், சந்தேகத்தின் பேரில், தடுத்து நிறுத்தப்பட்டார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 1643 மூலம் அவர் துபாய் செல்ல இருந்தார்.

ALSO READ | PNB வழக்கு: நீரவ் மோடியின் ஜாமீன்மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது

அவரது உள்ளாடைகளில் இருந்து கருப்பு நிற டேப்பால் கட்டப்பட்ட மூன்று கட்டுகள் மீட்கப்பட்டன. அந்த கட்டுகளில் 15,600 அமெரிக்க டாலர்களும், அவரது கைப்பையில் இருந்த சிகரெட் பாக்கெட்டில் 3,000 அமெரிக்க டாலர்களும் இருந்தன.

சுங்க சட்டம் 1962 r / w FEM (நாணய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) விதிமுறைகள், 2015 இன் கீழ், மொத்தம் 18600 அமெரிக்க டாலர்கள் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை விமான நிலைத்தில், தொடர்ந்து தங்கம் உள்ளிட்ட பிற பொருட்கள் பிடிபட்டு வருகின்றன.

ஐந்து நாட்களுக்கு முன்பு துபாயில் (Dubai) இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய நான்கு பயணிகளிடமிருந்து 864 கிராம் 24 கேரச் தூய தங்கத்தை சுங்க விமான துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 1644 மூலம் துபாயிலிருந்து வந்த தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிராஜிதீன் ஜாபர், 27, அனிஷ் ரஹ்மான், 24, சதகதுல்லா, 24, மற்றும் சாகுபார் அலி, 39, தங்கத்தை பேஸ்ட் வடிவில் மலக்குடலில் வைத்து கடத்தி வந்தனர் 

ALSO READ | இந்தியா அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தை என்பது என்ன... எப்போது தொடங்கப்பட்டது..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News