போட்டி தேர்வுகளில் தூள் கிளப்ப... அரசு அளிக்கும் இலவச பயிற்சி - விண்ணப்பிக்க இன்றே கடைசி!

Naan Mudhalvan Scheme: மத்திய அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், மாணவர்களுக்கு அரசு சார்பில் நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sudharsan G | Last Updated : May 20, 2023, 01:00 PM IST
  • இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
  • இதில், வல்லுநர்களை கொண்டு நேரடி பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • மாவட்டத்திற்கு தலா 150 மாணவர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
போட்டி தேர்வுகளில் தூள் கிளப்ப... அரசு அளிக்கும் இலவச பயிற்சி - விண்ணப்பிக்க இன்றே கடைசி! title=

Naan Mudhalvan Scheme: "நான் முதல்வன்" போட்டித் தேர்வு பிரிவானது தமிழ்நாடு இளைஞர்கள் மத்திய அரசுப் போட்டிகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவான சிறந்த திறன் பயிற்சி வழங்குவதையே முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்ட திட்டமாகும். 

மார்ச் 7இல் தொடக்கம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழக அரசின் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பில்  சேர மே 20ஆம் தேதிக்குள் (அதாவது இன்று) விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பயிற்சி வகுப்புகள் வரும் மே 25ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

முதல்வரால் தொடங்கப்பட்ட, மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவானது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க | புதுமைப் பெண் திட்டம்: திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டம் - உயர்க்கல்வியால் உயரும் பெண்கள்!

நேரடி பயிற்சி

இதன் மூலம் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையங்களான (SSC), ரயில்வே பணியாளர் தேர்வுகள் (RRB), வங்கித் தேர்வுகள் (Banking), இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் (UPSC) போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

இதில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்திற்கு தலா 150 மாணவர்கள் வீதம் சிறந்த வல்லுநர்களைக் நேரடி வகுப்புகள் மூலம் பயிற்சியளிக்கப்படும்.

இன்றே கடைசி

நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பில் சேர   விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான செலவினங்களை "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-naan-mudhalvan-shortfilm-festival-429613
 
இத்திட்டம் குறித்து மேலும் அறிந்துகொள்ள மாணவர்கள் இந்த இணையதளத்தை அணுகவும் (https://www.naanmudhalvan.tn.gov.in/)/. இப்பயிற்சியில் பயன்பெற ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் "http://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX" என்ற பதிவு தளத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | இந்தியாவெங்கும் சமூக நீதி... முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த முக்கிய மாநாடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News