திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என பொன்.ராதாகிருஷ்ணன் உருக்கம்!!
தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல் நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார். அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அவ்வப்போது, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவர் வந்து செல்கிறார்.
கடந்த 18 ஆம் தேதி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில் பழைய குழாய் அகற்றப்பட்டு 4 வது முறையாக அவருக்கு புதிய குழாய் பொருத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருப்பதாக செய்திகள் வெளிவந்த நேரத்தில் நேற்று இரவு மருத்துவர்களும், செவிலியர்களும் கோபாலபுரம் இல்லம் சென்று அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த தகவலை அறிந்த திமுக தொண்டர்கள் அனைவரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வெளியில் அலைமொதினர். இதையடுத்து, கட்சித்தலைவர்கள் அனைவரும் கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று நலம்விசாரித்து வந்தனர். இதையடுத்து, இவர் பூரண குணமடைய வேண்டும் என்று இறைவனை பிராத்திப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று நலம்விசாரித்துள்ளார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கூறுகையில்.... திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வேண்டும் என நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறினார். இதையடுத்து, கருணாநிதியின் உடல் நிலையில் தற்போது முனேற்றம் அடைந்துள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகவும் தெரிவித்தார்.
After meeting MK Stalin & Kanimozhi, I came to know that Karunanidhi's health is improving. They also conveyed that Prime Minister spoke to them over phone inquiring about Karunanidhi's health. I'll share details with PMO & other senior leaders: Union Minister Pon Radhakrishnan pic.twitter.com/ckq8ibrFzE
— ANI (@ANI) July 27, 2018