மதுரை ஆதீன மடத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 12-ம் தேதி காலமானார். அதையடுத்து தானே அடுத்த மடாதிபதி என்று நித்தியானந்தா சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிவித்தார்.
ஆனால், மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு பிறகு, 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நித்தியானந்தா, 293வது பீடாதிபதியாக தான் பதவியேற்றுகொண்டுள்ளதாகவும் இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Also Read | நானே மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி! சர்ச்சைகளின் நாயகன் நித்தியானந்தா….
தற்போது, மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றதாக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா, கைலாசா நாடு, ஆதின மட செயல்பாடுகளின் வழிகாட்டுதல் குறித்து 8 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆதினத்தின் 292வது சன்னிதானமான அருணகிரிநாதரின் மறைவுக்கு கைலாசா நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
தனது பெயரை 293வது ஜெகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் மாற்றிக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு நித்தியானந்தாவை,அப்போதைய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், மடத்தின் இளைய பீடாதிபதியாக அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை சந்தித்த நிலையில் 2019ம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றுக் கொண்டார்.
ஆனால் அதை ஏற்க மறுக்கும் நித்தியானந்தா, மதுரை ஆதீன மடத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதரின் மறைவுக்கு பிறகு தானே, ஆதீனத்தின் 293வது பீடாதிபதி என்கிறார்.
தான் பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டதாகவும், ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் பேஸ்புக்கில் சாமியார் நித்தியானந்தா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
293வது ஜகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என்று தனது பெயரை நித்தியானந்தா அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் நித்தியானந்தாவின் இந்த அறிவிப்பு பரபரப்பை மட்டுமல்ல, பல்வேறு விதமான எதிர்வினைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார்,
இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், 2019ஆம் ஆண்டு அந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றுக் கொண்டார். ஆனால், நியமித்தது நியமித்தது தான், நான் தான் வாரிசு என்று பிடிவாதமாக இருக்கிறார் நித்தியானந்தா.
நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் இந்தியாவில் உள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். நாத்தீக ஆட்சியாளர்கள் மற்றும் இந்து மத விரோதிகளின் அரசியல் சதியால் இந்தியாவை விட்டு வெளியேறியதாக சொல்பவர் நித்தீயானந்தா. அவர் நாட்டை விட்டு வெளியேறி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
Also Read | மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக தன்னை அறிவித்துள்ள நித்யானந்தா...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR