தகாத உறவை கண்டித்த கணவன் காதலனால் வெட்டிக்கொலை! காதலிக்காக மனைவியையும் கொன்றாரா?

தலைவாசல் அருகே வீரகனூரில் தகதாக உறவை கண்டித்த காதலியின் கணவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்ததாக செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.   

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Sep 21, 2023, 12:51 PM IST
  • தகாத உறவை கண்டித்ததால் கொலை
  • காதலியின் கணவர் வெட்டிப் படுகொலை
  • காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை
தகாத உறவை கண்டித்த கணவன் காதலனால் வெட்டிக்கொலை! காதலிக்காக மனைவியையும் கொன்றாரா? title=

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு  திருமணமாகி சத்யா என்ற மனைவியும்  இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு செல்வம் வீரகனூர் பேருந்து நிறுத்தம் அருகே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை  இரண்டு கைகளையும் துண்டாக வெட்டியதோடு தலை, கழுத்து என படு பயங்கரமாக ஒருவர் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார். ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்வம் குறித்து வீரகனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் செல்வத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் படிக்க | கும்பகோணத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி - மேலும் 27 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள்

அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரகனூர் இராயர் பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், வீரகனூர் பேருந்து நிலையத்தில் பேன்சி ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் இறந்த செல்வத்தின் மனைவி சத்யா  வேலை செய்து வந்துள்ளார். நாளடைவில் செல்வராஜிக்கும் சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது தகாத உறவாக மாறியுள்ளது. இதுகுறித்து செல்வராஜின் மனைவி தட்டிக்கேட்ட அவரை செல்வராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைதான அவர் சிறையில் இருந்து சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

சிறையில் இருந்து வந்தவர், மீண்டும் சத்யாவுடன் பழகியுள்ளார். இதனால் செல்வம் மீண்டும் செல்வராஜை கண்டித்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த  செல்வராஜ்,  செல்வம் மீது  கடும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று செல்வராஜின் பேன்சி ஸ்டோர் முன்பு செல்வம் பிரச்சனை செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகாத உறவுக்கு தொடர்ந்து செல்வம் இடையூறாக இருந்ததால், ஒருகட்டத்தில் மறைத்து வைத்திருந்த வீச்சறிவாளால் செல்வத்தின் கைகளை வெட்டியுள்ளோர். தொடர்ந்து அவரது தலை மற்றும் கழுத்தை கொடூரமாக வெட்டிய செல்வராஜ் அங்கிருந்து தப்பியதாக தெரிகிறது. அதன்பிறகு தான் போலீசார் அங்கு வந்துள்ளனர். படுகாயம் அடைந்த செல்வமும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்த வழக்கில் தேடப்பட்ட செல்வராஜ் வீச்சருவாளுடன் வீரகனூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் செல்வத்தின் மனைவிக்கும் பங்கு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் தகாத உறவை கண்டித்த கணவன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | வங்கிக் கணக்கில் 9000 கோடி.... அதிகாரிகளை அலற விட்ட ஓட்டுநர்....

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News