டான்ஸில் கில்லாடிகளா நீங்கள்... ரூ.10 லட்சம் வரை பரிசு - சென்னையில் மாபெரும் நடனத் திருவிழா!

சென்னையில் மாயா யுனிவர்ஸ் நடத்தும் தேசிய அளவிலான GOD - (Greatest Of Dance) நடனப் போட்டி வரும் டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 27, 2023, 10:53 AM IST
  • 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அமைச்சர் மதிவேந்தன் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
  • நடிகர் புகழ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், நடிகர் சங்கீதா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
டான்ஸில் கில்லாடிகளா நீங்கள்... ரூ.10 லட்சம் வரை பரிசு - சென்னையில் மாபெரும் நடனத் திருவிழா! title=

Chennai Greatest Of Dance Competition: சென்னையில் மாயா யூனிவர்ஸ் என்ற அமைப்பு நடத்தும் தேசிய அளவிலான நடனப்போட்டியை சார்ந்த அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில், "சென்னையின் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவரும், தொழில் முனைவோருமான டாக்டர் சரண்யாவின் முன்னெடுப்பான Maya Universe, தேசிய அளவிலான நடனப்போட்டியான GOD - Greatest Of Dance போட்டியை அறிமுகப்படுத்துகிறது. 

இந்தியாவின் பலதரப்பட்ட கலாசார வகைகளின் கலைத்துவத்தை வெளிக்கொண்டு வரும் மாபெரும் நடனத் திருவிழாவாக GOD நிகழ்சசி நடைபெற இருக்கிறது. பலதரப்பட்ட கலாசாரங்கள், வடிவங்கள் மற்றும் அமைப்புகளின் தொகுப்பாக திகழும் மேற்கத்திய நடனத்தை அங்கீகரிக்கவும் ஊக்குவிக்கவும் இந்த முயற்சி நடத்தப்படுகிறது. 

எங்கு, எப்போது நடக்கிறது?

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் வரும் டிச. 2, 3 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த நடனப்போட்டி, அபரிமிதமான நடன திறமைகளை ஒன்றிணைக்கவும், பல்வேறு நடன வடிவங்களை வெளிப்படுத்தவும், படைப்பாற்றலை ஊக்குவிப்பதிலும் உறுதி அளிக்கிறது. இளம் நடனக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், பெரிய அளவில் போட்டியிடவும், தன்னார்வலர்கள் பலருடன் இணைந்து தேசிய அளவிலான பெரும் வாய்ப்பாக அமைகிறது. 

மேலும் படிக்க | சந்தானத்தின் 80ஸ் பில்டப்.. வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ விவரம்

அனைத்து வயதினருக்காக உருவாக்கப்பட்டுள்ள போட்டிகளில், நடனக்கலையின் பரந்த தனித்துவ வகைகளின் திறன்களை வெளிக்கொணரும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. ஒருவருக்கொருவர் மோதும் நடனப் போட்டியில் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான நடனப்போர் பிரிவில் திறந்தநிலை மற்றும் ஹிப் ஹாப் வகைகளில் போட்டி நடத்தப்பட உள்ளது. அதேபோல், நடன அமைப்பின் அடிப்படையில் நிகழும் போட்டியில் சிறுவர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பிரத்யேக பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

டாப் 10 நடுவர்கள்

மேலும், இந்த போட்டியின் சிறப்பம்சங்களாக சில விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளனர். அதாவது,"Irudhi Suttru Extreme என்ற பெயரிலான நடனப்போரின் இறுதிச் சுற்று, சுதன் மற்றும் க்ரிஷ் தலைமையில் சென்னை பெரம்பூரில் இயங்கும் The Chennai Dance Palace-ன் ஒத்துழைப்புடன் நடைபெற உள்ளது. 

நடன வகைகளில் திறந்தநிலை மற்றும் ஹிப்ஹாப் பிரிவுகள் சிறுவர்கள், ஆண்கள் மற்றும் அனைத்து பெண்கள் அணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவில் புகழ்பெற்ற நடன இயக்குநர்களான ரூவெல் டாவ்சன் வ்ரிந்தானி, பிரவின் ஜி, சம்போ முகர்ஜி, அகன்க்‌ஷா சர்மா உட்பட 10 பேர் நடுவர்களாக ஒரே மேடையில் போட்டியாளர்களுக்கு மதிப்பெண் அளிக்க உள்ளனர்.

பரிசுகள் என்னென்ன?

முதன்முறையாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் பங்கேற்பாளர்களை கௌரவப்படுத்தப்பட உள்ளன. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க, புகழ்பெற்ற சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். 

சிறப்பு விருந்தினர்கள்

அந்த வகையில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், புகழ்பெற்ற நடன இயக்குநர் பாபா பாஸ்கர், நடிகையும் நடனக் கலைஞருமான சங்கீதா க்ரிஷ், நகைச்சுவை நடிகர் புகழ் உட்பட பல்துறை வித்தகர்கள் சிறப்பிக்க உள்ளனர்" எனவும் குறிப்பிட்டுள்ளனர்

இதில் பங்கேற்று தங்கள் நடனத் திறனை வெளிப்படுத்த விரும்புவர்களுக்கு பதிவுச்சீட்டு உள்ளிட்ட விவரங்களை பெற பெறுவதற்கு தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களும் உள்ளன. (9962587788, 9962507788, info.godance23@gmail.com, mayauniverse23@gmail.com)

மேலும் படிக்க | மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது - குஷ்பூ திட்டவட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News