TN HSE(+1) Results 2024: தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு 2024 ஆம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (TN HSE(+1) Results is expected), கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வை மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியிருந்த நிலையில், தற்போது இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.
அண்மையில் 10 ஆம் மற்றும் 12 ஆம் தேதி வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது இன்று காலை 9.30 மணிக்கு தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (TN 11th Result) இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படவுள்ளது என்று தெரிவித்து இருந்தது.
தேர்வு முடிவுகளை எப்படி சரிப்பார்ப்பது?
தேர்வு எழுதியவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பார்க்கலாம். அதற்கு அவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்:
இந்த நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 90/93 சதவிகிதம் மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் sms மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
>tnresults.nic.in இணையதளத்தை தேடவும்
>11ஆம் Exam Results May 2024 என்பதை அழுத்தவும்.
>உள் நுழைவதற்கான log in லிங்க் திறக்கும்.
>உங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி-வருடத்தை குறிப்பிட வேண்டும்.
>உங்களது தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும், இதை ஸ்கிரீன் ஷாட் அல்லது டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்ளுக்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3302 மையங்களில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 187 பேர் இந்த தேர்வை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் தனித்தேர்வர்களாக 4 ஆயிரம் 945 பேரும் எழுத அனுமதி அளிக்கப்பட்டது. சிறைவாசிகள் 187 பேர் அடங்குவர். சென்னை மாவட்டத்தில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரத்து 852 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வினை எழுத அனுமதிக்கப்பட்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ