ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவச் செலவு எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 18, 2018, 01:12 PM IST
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவச் செலவு எவ்வளவு தெரியுமா? title=

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழக முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அதற்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு 75 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இறுதியாக சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா உயிரிழந்தார்.

தமிழக முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் குற்றசாட்டினர். இதனையடுத்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. 

இந்தநிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மறைந்த செல்வி ஜெயலலிதாவுக்கு 75 நாட்களில் எதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து முழு விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

75 நாட்கள் ஆனா செலவு விவரங்கள்.......!!

> ஜெயலலிதாவுக்கு உணவு வழங்கியதற்கு ஆன செலவு ரூ.1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய்.

> ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு கட்டணம் ரூ.92.7 லட்சம்.

>  அவரது அறை வாடகை கட்டணம் ரூ.24.19 லட்சம், 

> ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் மருத்துவமனை உதவியுடன் அளிக்கப்பட்ட பிசியோதெரபி சிசிச்சைக்கான கட்டணம் ரூ.1.29 கோடி

> ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைக்கான் மொத்த மருத்துவச்செலவு ரூ.6.85 கோடி.

தமிழக முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மொத்த செலவுத்தொகையில் ரூ.6.41 கோடி காசோலையாக கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் வழங்கப்பட்டுள்ளது. மீதித்தொகையான ரூ.44.56 லட்சம்  தர வேண்டியுள்ளது என்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் கூறியுள்ளது.

Trending News