சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையம் நண்பர்கள் குழு சார்பில் 34 ஆம் பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை ரேக்ளா போட்டி நடைபெற்றது. இந்த போட்டி ஆத்தூர் உடையார்பாளையத்திலிருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற. இதில் முதலில் சிறிய குதிரைகளுக்கான போட்டி நடைபெற்றதில் ஆத்தூர் திருச்சி கோவை சேலம் குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறுமாவட்டங்களில் இருந்து வந்த 17 சிறிய குதிரைகள் போட்டியில் கலந்து கொண்டன.
குதிரை ரேக்ளா போட்டி உடையார் பாளையம் காந்தி சிலையிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் கொத்தாம்பாடி எல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது. இதில் கோவையைச் சேர்ந்த வினோத் என்பவரது நவீன் பிரதர்ஸ் குதிரை முதல் பரிசு 20 ஆயிரத்தையும், இரண்டாவது பரிசை ஏவிஎம் ஃப்ரூட்ஸ் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது குதிரை 15 ஆயிரத்தையும் வென்றது. திருச்சி சேர்ந்த சங்கிலி கருப்பன் உள்ளிட்ட குதிரைகள் மூன்றாம் பரிசை தட்டி சென்றது.
அதைத்தொடர்ந்து 14 கிலோமீட்டர் எல்லையாக கொண்டு பெரிய குதிரைகளுக்கான போட்டி நடைபெற்றது.
இதில் சேலம் நாமக்கல் ஆத்தூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த பத்து குதிரைகள் கலந்து கொண்டன. கோவையைச் சேர்ந்த பாமகண்ணு சரவணன் குதிரை முதல் பரிசை 25 ஆயிரத்தையும், இரண்டாவது பரிசை சேலம் குமார் புல்லட் குதிரை 20 ஆயிரத்தையும், மூன்றாவது இடத்தைப் பிடித்த ஆத்தூர் லக்கி ஸ்டார் குதிரை 15 ஆயிரத்தையும் பரிசை தட்டி சென்றது.
மேலும் படிக்க | உயிரே போனாலும் விதைநெல்லை உணவாக்கி உண்ணமாட்டார்கள், உழவர்கள்!
வெற்றி பெற்ற குதிரைகளின் ஜாக்கிடம் முதல் பரிசு 25 ஆயிரத்தையும், சிறிய குதிரைக் காண முதல் பரிசு 20 ஆயிரத்தையும் உட்பட மொத்தம் ஒரு லட்சத்திற்கான பரிசுத்தொகையை விழா குழுவினர் வழங்கினார்கள். மேலும் இந்த ரேக்ளா போட்டியை காண வழி நெடுகிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்க்க குவிந்தனர் இந்த ரேக்ளா போட்டிக்கு முதலில் அனுமதி காவல்துறையினர் மறுத்தனர். ஆனால், ஆளுங் கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி பெற்றனர். இதில் பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும், காவல்துறை பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரேக்ளா போட்டியின் போது குதிரைக்கு பின்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சென்றதால் குதிரை போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளால் மிகுந்த அவதிக்கு உள்ளாதாக தெரிவித்தனர்.
சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ரேக்ளா போட்டியில் இருசக்கர வாகனங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமாறு விழா குழுவினருக்கும் காவல்துறைக்கும் ரேக்ளா போட்டி வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ