வன்னியர் உள் இட ஒதுக்கீட்டின் வரலாறு...

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான 20 சதவீதத்தில் வன்னியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

Written by - G.Sureshrajan | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 31, 2022, 04:44 PM IST
  • 1989ஆம் ஆண்டுக்கு முன்பு வன்னிய சமுதாயம் அரசின் இடஒதுக்கீடு பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்தது.
  • போராட்டத்தில் பங்கெடுத்த 18000 க்கும் மேற்பட்ட வன்னிய சமுதாய மக்கள் கைது செய்யப்பட்டனர்.
  • முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
வன்னியர் உள் இட ஒதுக்கீட்டின் வரலாறு... title=

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான 20 சதவீதத்தில் வன்னியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

வேலை வாய்ப்பு , கல்வி போன்றவற்றில்  வன்னியர்களுக்கு தகுந்த இட ஒதுக்கீடு இல்லையெனக் கூறி பாமக  போராட்டங்களை நடத்திவந்தது. தனி இடஒதுக்கீடு வேண்டுமென்று 1987ஆம் ஆண்டு வன்னிய சமுதாய மக்கள் மிக பெரிய  போராட்டம் நடத்தினர்.

1989ஆம் ஆண்டுக்கு முன்பு  வன்னிய சமுதாயம் அரசின் இடஒதுக்கீடு பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்தது. பெரும்பான்மையான மக்களை கொண்ட இந்த சமூகத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனர். மொத்தமுள்ள 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் தங்கள் சமுதாய மக்கள்  ஒரு விழுக்காடு பலன்களைத்தான் அனுபவிக்கிறார்கள் என்றும் முன்னதாகவே சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறிய சமூகங்களுடன் போட்டியிட முடியவில்லை என்றும்  எங்கள் சமூகத்துக்கு எங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப, 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வன்னியர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மேலும் 1986 ஆம் ஆண்டு சாலைமறியல் , ரயில் மறியலில் ஈடுபட்டனர். அரசின் கவனத்தை ஈர்க்க  வேண்டி வன்னிய சமுதாய மக்களை ஒன்றுதிரட்டி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வன்னிய சமுதாய தலைவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.   பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்  ராமதாஸ் வன்னியர் சங்க போராட்டத்தை நடத்தினார்.  1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வடதமிழகத்தில் போராட்டம் வலுத்தது. ராமதாஸ் திண்டிவனம் போராட்டத்தில் பங்கேற்றார்.  சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த உயர்ந்த மரங்கள் எல்லாம்  வெட்டி சாய்த்து மறியலை நடத்தினர்.  இதனையடுத்து ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.  அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியாகினர். போராட்டத்தில் பங்கெடுத்த 18000 க்கும் மேற்பட்ட வன்னிய சமுதாய மக்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க | வன்னியர் 10.50% உள் இட ஒதுக்கீடு; உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சாதகமானதே: ராமதாஸ்

1989ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் "மிகவும் பிற்படுத்தப்பட்டோர்" என்ற பிரிவை உருவாக்கியது. அதில் வன்னியர் உட்பட வேறு பல சாதியினரும் இடம்பெற்றனர். இதற்கு வன்னிய சமூகத் தலைவர்கள் சிலர் ஆதரவு அளித்தாலும் ராமதாஸ் கடுமையாக விமர்சித்தார்.

விமர்சனங்கள் இருந்த போதிலும் ,கருணாநிதிக்குப் பாராட்டுவிழா நடத்திய மருத்துவர் ராமதாஸ், தொடர்ந்து, 20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டையும் வலியுறுத்தினார். அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்றன.
இந்த நிலையில்  கடந்த 2021, பிப்ரவரி 26ஆம் தேதி அதிமுக அரசின், தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், 2021 சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் சில நிமிடங்களுக்கு முன்பாக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிப்பதாக அறிவித்தது.பிறகு  தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்து, தமிழக அரசிதழிலும் அது வெளியிடப்பட்டது.பின்னர்  தி.மு.கவின் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் அது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

மேலும் படிக்க |  வன்னியர் உள்ஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லும்...உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்தது. அதன் அறிக்கை வெளியாகாத நிலையில், இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதத்திற்கு பின்னர் சாதிவாரிக் கணக்கீடு முடிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், சட்டப்பேரவையில் அன்றைய முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். ஆனால்  இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுவே சட்டரீதியான இட ஒதுக்கீடு அமைய வாய்ப்பு அளிக்கும். ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சாதிவாரி கணக்கீடு தொடர்பான முடிவுகள் வெளிவரும் வரை நிறுத்தி வைக்கவும், அதுவரையிலும் வன்னிய சமூகத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை நடைமுடைப்படுத்த இடைக்கால தடை விதிக்கவும் வேண்டும் என மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த ஜூலை 26ஆம் தேதி 10.5% உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டது. வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் சிறப்பு அமர்வாக நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஆனால் அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறி 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது எனக்கூறி சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் பாமக உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இன்று காலை நீதிபதிகள் எல்.நாகேஸ்வராவ் மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளனர். சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது.

மேலும் படிக்க | நீட் தேர்வு தேதி அறிவிப்பு... விலக்கு பெறுமா தமிழகம்? குழப்பத்தில் மாணவர்கள்!

வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை. வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் அரசியல் சட்டத்தின் 14,16வது பிரிவுகளுக்கு விரோதமானது என்று சொல்லி வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும் எனவும் உத்தரவிட்டனர். இது குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பெற ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

 

Trending News