தொடர் கனமழை: வால்பாறை, பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை, நீலகிரி மாட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை மற்றும் பந்தலூர் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jul 11, 2018, 08:42 AM IST
தொடர் கனமழை: வால்பாறை, பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை! title=

கோவை, நீலகிரி மாட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை மற்றும் பந்தலூர் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த கனமழை பெய்து வருகிறது. வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளித்த கலெக்டர் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அதே நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுாகா பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு வெளியிட்டுள்ளார்.

மேலும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளித்துமாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Trending News