Rain Alert: இதென்ன அதிசயம்..! சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கனமழை..!

Chennai Rains: சென்னையில் சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் அளவிற்கு ஜூன் மாதத்தில் மழை பெய்துள்ளது என கூறப்படுகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 19, 2023, 02:44 PM IST
  • சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை.
  • 27 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் அளவிற்கு சென்னையில் கனமழை.
  • தொடர் விடுமுறையால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி.
Rain Alert: இதென்ன அதிசயம்..! சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கனமழை..! title=

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், ஜூன் மாத மழை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் கனமழை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான அளவில் மழை பெய்து வந்தது. சாரல் மழையாக இருந்த இது, நேற்று இரவு முதல் சற்று அதிகமாக பெய்ய தொடங்கியது. இன்று அதிகாலை ஆரம்பித்த கனமழை, சென்னையில் விடாமல் பெய்து வருகிறது. இதனால், சென்னையில் உள்ள பல முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன. 

பள்ளிகளுக்கு விடுமுறை:

அதிக மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது, ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு கோடை வெயில் காரணமாக விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று அதிக கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னை சுற்றுவட்டார பகுதிகளான திருவெற்றியூர் தண்டையார்பேட்டை வியாசர்பாடி பெரம்பூர் மாதாவரம் மணலி ஆகிய பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டியதால் இதை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திர்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து, சென்னையில் ஜூன் மாத மழை குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | இன்று மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

27 வருடங்களுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கனமழை: 

தமிழ்நாடு வெதர்மேன், என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தமிநாட்டின் வானிலை நிலவரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்வது வழக்கம்.

அவர், இன்று ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு கனமழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடைசியாக 1996ஆம் ஆண்டிற்கு பிறகு இது வரலாறு காணாத மழையாக இருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

படுகுஷியில் 2 கே கிட்ஸ்: 

தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்குத்தான் விடுமுறைக்கு மேல் விடுமுறை விடப்பட்டு வருகிறது. கொரோனா அலை, கொஞ்ச நாள் ஸ்கூல், மீண்டும் கொரோனா அலை என்று இரண்டு ஆண்டுகள் இப்படியே கழிந்தது. இதையடுத்து கடும் வெயில் காரணமாக இந்த வருட கோடை விடுமுறை சில நாட்கள் நீட்டிக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் இப்போது மழையின் காரணமாக மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை இப்படியே தொடர்ந்தால், 2 கே குழந்தைகளின் விடுமுறையும் தொடர வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது. இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் படு குஷியில் உள்ளனர். 

புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்வு:

கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் கணிசமாக உயர தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிற ஏரிகளின் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அவற்றின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு:

சென்னை மட்டுமன்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்துவருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் நுழைவாயிலில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனம் ஓட்டிகளும் ரயில் பயணிகளும் கடுமையாக  அவதியுற்றுள்ளனர்.இன்று திங்கட்கிழமை வேலைநாள் என்பதால் பலரும் வேலைக்கு செல்லமுடியாமல் சிரமத்திற்கு ஆள்ளாகியுள்ளனர். சென்னையின் முக்கிய பகுதிகளான மைலாப்பூர், திரு.வி.க நகர், வடபழனி, திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த பகுதியில் பயணம் மேற்கொள்பவர்கள் பாதுகாப்பாக செல்லவும். 

மேலும் படிக்க | வாகன ஓட்டிகளே உசார்! பல இடங்களில் மழையால் போக்குவரத்து பாதிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News